மீண்டும் திருமுருகன் இயக்கும் புதிய சீரியல்..!! இந்த முறை சன் டிவி இல்லையாமே..??
சென்னை: சீரியல் இயக்குனர் திருமுருகன் தற்போது புதிய சீரியல் ஒன்று இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
வழக்கமாக அவருடைய சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும். ஆனால் தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திருமுருகனின் சீரியல் வருவதை நினைத்து ரசிகர்கள் இப்போதே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பிரபலமான கோபி
சீரியல் ரசிகர்களுக்கு திருமுருகன் என்று சொன்னால் கூட அந்த அளவிற்கு தெரியாவிட்டாலும் அவரை கோபி என்று சொன்னாலே பலருக்கும் டக் என்று நினைவிற்கு வந்துவிடும். அந்த வகையில் அறிமுகமான முதல் சீரியல் ஆன மெட்டி ஒளி மூலமாக இவர் கோபி கேரெக்ட்டரில் அனைவருடைய மனதையும் பல வருடங்களாக கவர்ந்து விட்டார். கோபியாகவே இவர் நடிக்கும் சீரியல்களில் எல்லாம் வலம் வந்ததாலோ என்னவோ இவருடைய பெயரை இப்ப வரைக்கும் ரசிகர்கள் பலர் கோபி என்று தான் அழைத்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் அரசு வேலை
திருமுருகனின் சொந்த ஊர் காரைக்குடி தானம். அதனாலோ என்னவோ இவர் எடுக்கும் சீரியல்கள் எல்லாமே கிராமங்களை மையமாகக் கொண்டதாகவே இருந்து வருகிறது. இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் படிப்பிலும் அப்பவே கெட்டிக்காரராக தான் இருந்திருக்கிறார். நடிப்பை விடவும் இவருக்கு இயக்கம் ரொம்பவே பிடித்ததாம். ஆரம்பத்தில் இவருக்கு இப்போ பொதிகை ஆக இருக்கும் தூர்தர்ஷன் சேனலில் வேலை கிடைத்திருக்கிறது. அங்கே இருக்கும் போது இவர் வேலை பார்த்த அனுபவத்தின் காரணமாகத்தான் கோகுலம் காலனி என்னும் சீரியலை எடுத்திருக்கிறார்.

வெற்றி கொடுத்த மெட்டிஒலி
முதல் சீரியல் இவருக்கு பெரிய அளவில் வெற்றி கொடுக்கா விட்டாலும் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலமாக இவர் அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டார். இந்த சீரியலில் இவர் கோபி கேரக்டரில் நடித்து இந்த சீரியலை இயக்கியும் வந்துள்ளார். இந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகத்தான் இவர் நாதஸ்வரம் சீரியலிலும் கோபி என்ற பெயரை வைத்துக் கொண்டார் போல, மெட்டி ஒலி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐந்து பெண்களின் கதையும், பெண்களைப் பெற்ற தந்தையின் கதையாகவும் இருந்து வந்தது. இந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வெற்றி இந்த சீரியலை பல மொழிகளிலும் ரீமேக் செய்து இருக்கிறார்கள். இப்ப உள்ள தமிழ் சீரியல்கள் பல பிற மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் தமிழ் சீரியலை பிற மொழியில் ரீமேக் செய்வது என்றால் அது திருமுருகனின் சீரியலாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மீண்டும் சின்னத்திரையில்
சீரியல் மட்டுமல்லாமல் சீரியலில் இவருக்கு கிடைத்த வெற்றியின் காரணமாக திருமுருகன் வெள்ளித்திரையில் எம் மகன் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலமாக இவருக்கு வெள்ளித்திரையிலும் அதிகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெள்ளித்திரைக்கு சென்றாலும் மீண்டும் சின்னத்திரையில் பல சீரியல் களை எடுத்து வருகிறார்.தற்போது ஒரு சில வருடங்களாக இவருடைய சீரியல்கள் இல்லாததால் இவருடைய ரசிகர்கள் ரொம்பவே இவரை எதிர்பார்த்து வந்திருந்தனர். ஆனால் தற்போது இவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு படியே புதிய சீரியல் ஒன்று தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. ஆனால் ரசிகர்கள் எப்போதும் இவரை சன் டிவி சீரியலில் பார்த்து வந்தனர். ஆனால் தற்போது இவர் இயக்கும் சீரியல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதைக் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாக காரணத்தால் ரசிகர்கள் இன்னும் பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications