Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணம் முடிந்த மகிழ்ச்சியோடு கணவருக்கு க்யூட்டாக பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய ஷபானா

Subscribe to Oneindia Tamil

சென்னை: முகத்தில் மகிழ்ச்சி பொங்க ஷபானா வெளியிட்ட போஸ்ட் பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

தன்னுடைய காதல் கணவரின் பிறந்த நாளை எளிமையான முறையில் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்.

கல்யாண கொண்டாட்டத்தோடு பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் தொடங்கிவிட்டார் ஷபானா.

சந்தோசத்தை பகிர்ந்து ஷபானா

சந்தோசத்தை பகிர்ந்து ஷபானா

செம்பருத்தி சீரியலின் ஷபானாவிற்கு தற்போது மகிழ்ச்சி பொங்கும் வாரமாக தான் இந்த வாரம் இருந்து வருகிறது. இவருக்கு திருமணம் முடிந்து ஒரு சில நாட்கள் தான் ஆகின்றது. இந்த நிலையில் அவருடைய காதல் கணவருக்கு பிறந்தநாள் அவரை மேலும் மகிழ்ச்சி உள்ளதாக மாற்றி இருக்கிறது. அதனால்தான் அவர் சமூக வலைத்தளத்தில் தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி சந்தோஷத்தை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

அடுத்த மகிழ்ச்சியான செய்தி

அடுத்த மகிழ்ச்சியான செய்தி

இவருடைய திருமணத்திற்கு ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் இப்ப வரைக்கும் வருகின்றன. இந்த நிலையில் அடுத்ததாக ஒரு மகிழ்ச்சியான செய்தியை இவர் வெளியிட்டு இருக்கிறார். இதனால் இதற்கும் சேர்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். சின்னத்திரையில் சினிமா ஹீரோயினிகளுக்கு இணையாக முதல் சீரியலில் ரசிகர்களின் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்துவிட்ட ஷபானாவிருக்கு ரசிகர்களின் ஆதரவும் மேலும் மேலும் பெருகி வருகிறது.

பரபரப்பை ஏற்படுத்திய போட்டோ

பரபரப்பை ஏற்படுத்திய போட்டோ

ஷபானாவின் காதல் கணவரான ஆரியன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முதன்மையான சீரியல்களில் ஒன்றாக இருக்கும் பாக்கியலெட்சுமி சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் சின்னத்திரையில் உச்ச இடத்தில் இருந்தாலும் இவர்கள் காதலித்து வந்த செய்தியை இலைமறைகாயாக தான் ரசிகர்களுக்கு கூறிவந்தனர். ஆனால் ஒரு சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் ரகசியமாக மோதிரம் மாற்றிக் கொண்டதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர்.

வாழ்த்தும் ரசிகர்கள்

வாழ்த்தும் ரசிகர்கள்

தற்போது சென்னையில் கொட்டும் மழையில் இவர்கள் இருவரின் திருமணமும் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்கு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திருமணத்தின் அன்று தான் ஷபானா ரசிகர்களுக்கு வீடியோ வெளியீட்டு நன்றி கூறி, தன்னுடைய திருமண வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார். இந்த நிலையில் இன்று அவருடைய கணவரின் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராமில் இவர் திருமணத்தின் அன்று எடுத்த க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்டு 'ஹாப்பி பர்த்டே மை மேன்' என்று கேப்ஷன் வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று தங்களுடைய அன்பை காட்டி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+