நாட்டுக்கு இது ரொம்ப முக்கியமா??ரஜினி எவ்வளவு கவலைப்படுவார்..நெட்டிசன்களுக்கு பதில் கொடுத்த ஷகிலா
சென்னை: தற்போது பரவலாக ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வரும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் கருத்து வேறுபாடு பற்றி ஷகிலா தன்னுடைய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட செயலுக்கு சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு ஷகிலா பதிலடி கொடுத்துள்ளார்.

ஷகிலாவின் கருத்து
பொதுவாக பிரபலங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு செயலுமே அதிக அளவில் பேசப்பட்டு வரும். அந்த வகையில் டாப்பில் இருக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இவர்களின் விவாகரத்து செய்திகள் தான் தற்போது சமூக வலைத்தளத்தை அதிகமாக ஆக்கிரமித்து வருகிறது. இதை பற்றி பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஷகிலா தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக வெளியிட்டிருக்கிறார். அதில் தனிப்பட்ட ஒருவருடைய விஷயத்தை இவ்வளவு பெரியது பண்ணுவதற்கு என்ன காரணம் என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நெட்டிசன்களுக்கு அறிவுரை
எவ்வளவோ பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் போது இந்த பிரச்சனையை பற்றியே அனைவரும் பேசிக் கொண்டிருப்பது, இது அவ்வளவு முக்கியமான விஷயமா??இது அவர்கள் இருவரின் சொந்த முடிவு. அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டு,தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்ளவில்லை மனமொத்து தான் இவர்கள் இருவரும் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர். இவர்கள் எடுக்கும் முடிவுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பாளர்கள். ஆனால் அதைப்பற்றி சமூக வலைத்தளத்தில் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் கண்டமேனிக்கு மீம்ஸ்களைப் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள் பற்றி அவர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக ஷகிலா வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ரஜினிக்கு ஆதரவாக ஷகிலா கருத்து
ரஜினிகாந்த் தன் மகளைப் பற்றி பலரும் பலவிதமாக பேசுவதை கேட்கும் போது மனது எவ்வளவு கஷ்டப்படுவார். அவர் எவ்வளவு பெரிய ஆள்... ஆனாலும் அவரும் ஒரு தந்தை தான். அவருக்கும் அந்த வலி இருக்க தானே செய்யும். தங்கள் வீட்டில் ஒருவருக்கு மனதிற்கு பிடிக்கவில்லை என்றால் அவர் விவாகரத்து செய்கிறார்கள் என்றால் இப்படி எல்லாம் பேசுவார்களா? ? அவர்கள் விவாகரத்து செய்து கொள்வது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை. அதைப்பற்றி பொதுவெளியில் கண்டமேனிக்கு கமெண்ட் மீம்ஸ்களில் தங்களது திறமையை தெரிவிக்கிறோம் என்று தைரியம் இல்லாமல் பேசுபவர்கள் ஒரு அப்பாவின் மன வலியை புரிந்து கொள்வார்களா?? என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

வார்த்தைகளால் வசையடி
இருவருக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டுக்கு சம்பந்தமே இல்லாமல் அந்த விஷயமாக இருக்குமோ? ? இதுவாக இருக்குமோ?? என்று பலர் கற்பனை கோட்டைகளை கட்டிக்கொண்டு விவாதங்களை நடத்தி வருகிறார்கள். அப்படி அவர் பேசுவதற்கு அவர்கள் அருகில் சென்று அங்கே என்ன நடப்பது என்பதை நீங்கள் பார்த்தீர்களா?? என கேள்விகளை எழுப்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரின் பிரச்சனையில் சிம்புவை எதற்காக இழுக்கிறீர்கள்?? இவர்களுக்குப் பிடிக்கவில்லை 18 வருடமாக சந்தோஷமாக வாழ்ந்தவர்கள், தற்போது பிரிகிறார்கள் ,அதற்கு காரணம் என்று எப்படி உங்கள் மனதில் இருப்பதை யூகங்களாக வெளியிடலாம் என்றும் நெட்டிசன்களை வறுத்து எடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications