அப்பா உடல்நிலை சரியில்லாமல் போன காரணம் இதுதான்! கூட இருந்தவங்களே செய்த துரோகம்! விஜயகாந்த் மகன் உருக்கம்
சென்னை: நடிகர் விஜயகாந்த் பற்றி அவருடைய மகன் சண்முக பாண்டியன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். தன்னுடைய அப்பாவின் உடல்நிலை மோசமானதற்கு காரணம் அவருடன் இருந்தவர்கள் செய்த துரோகம் தான், அதற்குப் பிறகு அப்பா உடைந்து போய்விட்டார் என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர் மற்றும் தேமுதிக கட்சி தலைவராக இருந்த விஜயகாந்தை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி தன்னுடைய தனித்துவத்தால் இப்போதும் நிலைத்திருக்கிறார். விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உடல்நிலை குறைபாடு காரணமாக காலமானார்.

அதற்கு சில வருடங்களுக்கு முன்பே உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டது. அதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் சிங்கம் போல இருந்த விஜயகாந்த் பிறகு வீழ்சேரில் எழுந்து நடக்க முடியாத, அளவில் பார்த்தது ரசிகர்களுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தியது. அனைவரும் அவர் மீண்டும் பழைய நிலைக்கு வருவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் காலமாகி போனார்.
அவருடைய இறுப்பின் போது ஒட்டுமொத்த தமிழகமும் வருத்தத்தை தெரிவித்து வந்தனர். அவருடைய இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இப்போதும் அவர் மீது வைத்திருக்கும் அன்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த்க்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் இருக்கிறார். இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் இருக்கிறார். சண்முக பாண்டியன் நடித்த கொம்பு சீவி திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு அதிகமான பாசிட்டிவ் கமெண்டுகள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சண்முக பாண்டியன் ஒரு பேட்டியில் பேசும்போது, தன்னுடைய தந்தையை உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் அவருடன் இருந்த நண்பர்கள் அவருக்கு கொடுத்த ஏமாற்றம்தான். அவர்கள் சிலர் அப்பாவை விட்டு விலக தொடங்கி விட்டார்கள். அதற்கு பிறகு அப்பாவிற்கு ரொம்பவும் மனதளவில் வருத்தம் இருந்தது. ஆனால் அதை யாரிடமும் அவர் ஷேர் பண்ணவே இல்லை. அது கூட அவருடைய உடல்நிலை மோசமாக போனதற்கு காரணம் என்று சொல்லலாம்.
அதுபோல அப்பா எல்லோருக்குமே கொடுத்துதான் பழக்கப்பட்டவர் என்று சொல்வார்கள், அதற்கு முக்கிய காரணம் அம்மாவும் என்று பலருக்கு தெரியாது. ஒருவர் தான் சம்பாத்தியத்தை கஷ்டப்படுற இன்னொருவருக்கு கொடுக்கும்போது அவருடைய வீட்டில் இருந்தும் சப்போர்ட் கிடைத்தால் தான் கொடுக்க முடியும். இல்லை நமக்கு செலவு இருக்கிறது நம்முடைய குடும்பத்திற்கு வேண்டும் என்று வீட்டில் இருப்பவர்கள் கேட்டால் உதவி செய்பவர்களால் கொடுக்க முடியுமா?
அதுபோல என்னுடைய அம்மா என்னுடைய அப்பாவுக்கு எப்போதுமே உறுதுணையாக இருந்தாங்க. அவங்க எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு சரி என்று சொன்னாங்க. யாருக்கு உதவி செய்யும்போது ஏன் செய்யறீங்க என்று அம்மா கேட்டதே கிடையாது. அதனால் தான் அவர் இஷ்டபடியே இருக்க முடிந்தது என்று சண்முக பாண்டியன் பேசியிருக்கிறார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications