Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலாஜியின் பிறந்தநாளில் அம்மாவோடு கலந்துகொண்ட ஷிவானி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலாஜி முருகதாஸின் பிறந்தநாளில் ஷிவானி கலந்துகொண்ட போட்டோஸ்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பாலாஜியின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

நள்ளிரவு நேரத்தில் பிறந்த நாளில் எடுத்த போட்டோஸ்கள் வைரலாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

மாற்றம் கொடுத்த பிக் பாஸ்

மாற்றம் கொடுத்த பிக் பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார். பாலாஜியை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடவில்லை. அவர் ஒரு ஆணழகனாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயமாக மாறினார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய ஆப்டிடியூட் பலருக்கும் பிடித்து இருந்தாலும் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்று இவருக்கு நெகட்டிவ் கமெண்டுகளை கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தனக்கு வந்த நெகட்டிவ் கமெண்டுகளை பற்றி கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் இவர் விளையாட்டில் களைகட்டிக்கொண்டிருந்தார்.

ஒன்றாக சேர்ந்து விளையாட்டு

ஒன்றாக சேர்ந்து விளையாட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சிகள் என்றாலே அதில் சுவாரசியங்களும் பல நேரங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி அமைந்து விடும். ஆனால் ஒருசில செயல்கள் ரசிகர்களை வெறுப்படைய செய்யும் ஆனால் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் மூலமாக பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ஷிவானி இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார். நான்காவது சீசனில் போட்டியாளர்கள் பலரும் ஒற்றுமையாக ஒரு அணியாக தான் விளையாடி கொண்டிருந்தனர். இவர்களில் இருந்து மாறுபட்ட கோணத்தில் இருந்த ஆரி மட்டும் தனி ஆளாக பலமறை இருந்திருக்கிறார். அவரை எதிர்த்து பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு அணியாக அனைத்து போட்டியாளர்களும் இருந்து வந்தனர்.

தொடர்ந்து வரும் வதந்திகள்

தொடர்ந்து வரும் வதந்திகள்

அனைத்து சீசன்களிலும் வழக்கமாக வரும் வதந்திகளை போலத்தான் இந்த நான்காவது சீஸனிலும் ஷிவானி மற்றும் பாலாஜி இடையே காதல் என்று பலர் கூறிவந்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் இருந்த சக போட்டியாளர்களும் கூட சில நேரங்களில் இதே தான் கூறி வந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் சிறப்பு விருந்தினராக வந்த அவருடைய ஷிவானியின் அம்மா கூட பாலாஜியின் மீது தன்னுடைய மொத்த வெறுப்பையும் பார்வையாலே காட்டி இருந்தார். இந்த நான்காவது சீசன் வைரலாவதற்க்கு இவர்கள் ஒரு காரணம் தான். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விட்டு வெளியே வந்த பிறகு நாங்கள் நண்பர்கள் என்று சொல்லும் அளவிற்கு போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக வலம் வருகிறார்கள்.

செமையான பிறந்தநாள் கொண்டாட்டம்

செமையான பிறந்தநாள் கொண்டாட்டம்

இன்று பாலாஜியின் பிறந்தநாளுக்கு அவருடைய நண்பர்கள் மட்டுமல்லாமல், திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் இன்றைய பிறந்தநாளுக்கு நேற்று இரவு பாலாஜி அவருடைய நண்பர்கள் உடன் பிறந்த நாள் பங்க்ஷனை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். அதில் பலர் கலந்துகொண்டு இருந்தாலும் ஷிவானி அவருடைய அம்மாவுடன் கலந்துகொண்ட போட்டோஸ்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+