ராஜுவிடம் கடைசியாக இதற்காகத் தான் அப்படி பேசினேன்...மனம் திறந்த சுருதி
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்லும்போது ராஜுவிடம் பேசிய காரணத்திற்கு விளக்கத்தைக் கொடுத்துள்ளார் சுருதி.
பிரச்சனையை பெரிசு பண்ண வேண்டாம் என்றுதான் ராஜுவும் அமைதியாக விட்டுவிட்டாரோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இப்படி ஒரு பிரச்சனை நடந்ததே எங்களுக்குத் தெரியாதே என ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

சுருதியின் விளக்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பல நிகழ்வுகளில் ஒரு சில நிகழ்வுகள்தான் ரசிகர்களின் முன்பு காட்டப்படுகிறது. அந்த மாதிரி ரசிகர்களின் முன்பு காட்டப்படாத ஒரு விஷயத்தில்தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விட்டு வெளியே வரும்போது ராஜீவுடன் பேசியிருந்தேன் என சுருதி விளக்கம் கொடுத்திருக்கிறார். இவர் வீட்டை விட்டு வரும்போது மீண்டும் சென்று ராஜுவிடம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அது எதுவும் தனக்கு புரியவில்லை என்று ராஜு கூறிக்கொண்டிருந்தார்.

மீசை போடும் டாஸ்க்
தான் பேசியது ராஜுவுக்கு நன்றாகவே புரியும் ஆனால் புரியாதமாதிரி பிரச்சனையை பெரிது பண்ண வேண்டாம் என்று முடித்துக் கொண்டார் என்று கூறியிருக்கிறார். அப்படி என்னதான் இவர்களுக்குள் பிரச்சனை என்று பார்த்தால் நிரூப் தலைவர் ஆக இருக்கும்போது அர்ச்சனாவிடம் பாவனைக்கு மீசை போடும் டாஸ்க் கொடுத்து இருக்கிறார். அதேபோல ராஜுவுக்கு அக்ஷராவிற்கு மீசை போடும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜுவால் அந்த டாஸ்க் செய்ய முடியவில்லை.

எதிர் கேள்வி கேட்ட சுருதி
ராஜு தன்னால் செய்ய முடியாத டாஸ்கை பாவனியைச் செய்யச் சொல்லி இருக்கிறார். ஆனாலும் பாவனியால் அக்ஷராவுக்கு மீசை வரைய முடியவில்லை. இதனால் பாவனியை, ராஜு உனக்கு வெட்கமா இல்லையா உன்னால் ஒரு டாஸ்க் செய்ய முடியவில்லையே!! அக்ஷரா எப்படி உனக்கு மீசை வரைந்து விட்டார் என்று கலாய்த்திருக்கிறார். அப்போது அருகில் இருந்த சுருதி உங்களுக்கு வெட்கமா இல்லையா உங்களுக்கு தந்த டாஸ்க் நீங்க செய்ய முடியாமல் தான நீங்க பாவனிக்கு கொடுத்து இருக்கிங்க என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார். அப்போது பதிலேதும் சொல்லாமல் ராஜூ சென்றுவிட்டாராம்.

கடைசி நேரத்தில் சொன்ன அட்வைஸ்
அதற்குப் பிறகு அடுத்த நாள் சுருதி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவர் உள்ளே இருப்பது தெரியாமல் பாத்ரூம் பக்கத்தில் இருக்கும் சோபாவில் சிபி,ராஜூ அண்ணாச்சி போன்றோர் அமர்ந்திருக்கும்போது ராஜு, சுருதி என்னை பார்த்து உங்களுக்கு வெட்கமா இல்லையா என்று கேட்டு விட்டார் என்று கூறியிருக்கிறார். அதை மனதில் வைத்துக்கொண்டு இதற்கு தெளிவு படுத்தி விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தாராம். ஆனால் அதற்குள் அவர் வெளியேற்றப்பட்டதால் வெளியேறும் தருணத்தில் ராஜூக்கு அறிவுரை கூறியிருக்கிறார். உங்கள் முக மூடியை எடுத்து விட்டு வெளியே வந்து பேசுங்கள், அடுத்தவர்களைப் பற்றி அவர்கள் இல்லாத நேரங்களில் உங்களது கருத்துக்களை தெரிவிக்காதீர்கள் என்று அவர் கூறியது பலருக்கும் குழப்பமாக இருந்தாலும் தற்போதுதான் அதற்கான காரணம் புரிந்திருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications