புரட்சிகர காதல் காவியம்.. நானி-கீர்த்தி ஷெட்டி நடிப்பில்.. தமிழ் ஒடிடி யில்..கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: நானி மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்திரைப்படம் தமிழ் மொழியில் வெளியாவதால் நானியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இதற்கு ஆதரவு குவித்து வருகின்றனர்.

புரட்சிகர காதல் காவியம்
நானி நடிப்பில் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்ற "ஷ்யாம் சிங்க ராய்"திரைப்படம் இன்று நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 'புரட்சிகர காதல் காவியம்' என்று பாராட்டப்பட்ட இந்தப் படத்தில் சில குறைகள் இருந்தாலும், அதன் மேக்கிங் ஸ்டைலுக்காகவும், நடித்துள்ள நடிகர்களின் நடிப்பிற்காகவும், நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கொரனா காலத்திலும் தெலுங்கு பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி வரை வசூல் செய்து, நானி படங்களின் வரிசையில் குறிப்பிடும்படியான வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

வித்தியாசமான கதைக் கரு
மறுபிறவி குறித்து பல படங்கள் பல மொழிகளில் வந்திருந்தாலும், வித்தியாசமான கதைக் கருவை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. எப்பாடுபட்டாவது வாழ்க்கையில் முன்னேற துடித்துக் கொண்டிருக்கும் ஹீரோ ஒரு இயக்குனர்.கஷ்டப்பட்டு ஒரு படம் இயக்கி அதை வெற்றி அடையவும் செய்து, அந்தப் படம் வெற்றியால் வேறு மொழியிலும் திரைக்கு செல்லும்போது,யாரும் எதிர்பாராத விதத்தில் புது விதமான சிக்கலை சந்திக்கிறது. அந்த சிக்கலில் இருந்து ஹீரோ தப்பித்தாரா..!? அந்த சிக்கல் உருவாகுவதற்கு காரணம் என்ன..!? என்பதை விளக்கும் படமாக உருவாகி இருக்கிறது "ஷ்யாம் சிங்கா ராய்".

இரண்டு கதாபாத்திரத்தில்
நானி உடன் இந்த படத்தில் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி,மற்றும் மடோனா ஜெபஸ்டின் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை ராகுல் சங்கரித்தியன் இயக்கியுள்ளார். ஷ்யாம் சிங்கா ராய் மற்றும் வாசுதேவ காண்டா என்ற இரு கதாபாத்திரத்தில் நானி நடித்துள்ளார். ஷ்யாம் சிங்கா ராய் என்ற புரட்சிகர எழுத்தாளராக முற்பிறவியில் வரும் கதாபாத்திரம் நன்கு வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், தேவதாசி முறை பற்றிய பல புரட்சிகர கருத்துகளை எடுத்துக் கூறியதற்காகவும் பாராட்டப்பட்டது. படத்திற்கு படம் தன் நடிப்பில் மெருகேறி வரும் நானி இப்படத்தில் இரண்டு கதாபாத்திரத்திலும் வாழ்ந்திருப்பதாக விமர்சகர்கள் கூறினர்.

நல்ல அனுபவத்தை தரும் படம்
பாலையாவின் சமீபத்திய மிகப்பெரிய வெற்றிப்படமான அகண்டா படமும் இன்று ஹாட் ஸ்டார் இல் வெளிவர இருக்கிறது. ஆனால் தமிழில் வெளி வருவது குறித்து எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை ஆனால் ஷ்யாம் சிங்கா ராய் படம் தமிழ் ஆடியோ டப் செய்து வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரொமான்டிக், ஹிஸ்டாரிக்கல்,ஆக்ஷன், கலந்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் டப்பிங் பட ரசிகர்களுக்கு மட்டுமின்றி பீரியட் படம் விரும்புவர்களுக்கும் நல்ல அனுபவத்தை தரும் படமாக இருக்கும்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications