சிவகார்த்திகேயன் வியந்த மாற்றுத்திறனாளி ரசிகரின் திறமை... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
சென்னை: சிவகார்த்திகேயன் சமூகவலைதளத்தில் வியந்த ரசிகர் ஒருவரின் திறமையை தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
தன்னுடைய திரைப்படத்தின் பாடலை இவ்வளவு அழகாக வாசிக்கும் திறமையை பார்த்து மெய்மறந்து போய் உள்ளார்.
நிஜ திறமையைப் பார்த்து நீ தான் பா டான் என்று வாழ்த்துக்களை குவித்துள்ளார்.

வைரலான வீடியோ
என்னதான் திறமை இருந்தாலும்...!! பிரபலங்கள் அதை அங்கீகரிக்கும் பொழுதும், பாராட்டும் பொழுது தான் வெளியுலகிற்கு அந்த திறமை தெரியவருகிறது. அப்படித்தான் சமூக வலை தளங்களில் இதுவரை பல வீடியோக்களை போஸ்ட் செய்து இருந்தாலும் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த ஒரே காரணத்திற்காக. இந்த வீடியோ மட்டும் ஷேர் செய்த சில நிமிடங்களிலே பல லைக்குளையும், பாராட்டுகளையும் பெற்று இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

டான் திரைப்படத்தின் பாடல்
சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் டான் திரைப்படத்தின் "ஜலபுல ஜங்" பாடல் வெளியாகி அதிரி புதிரி ஹிட்டாகியுள்ளது.அனிருத் இசையில் வெளிவந்துள்ள இந்த பாடல் சிறியவர் முதல் பெரியவர் வரை கேட்டவுடன் அனைவரையும் ஆடவைத்து வருகிறது.பல்வேறு இணையவாசிகள் இந்தப் பாடலுக்கு குழந்தைகள் க்யூட்டாக ஆடுவதை வீடியோ எடுத்து தங்கள் சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.அவற்றில் ஒரு சில வீடியோக்களை நடிகர் சிவகார்த்திகேயனும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து பாராட்டியும் வந்தார்.

ரசிகரின் வேற லெவல் திறமை
சாம் சி மோகனபிரியன் என்ற மாற்றுத்திறனாளி மியூசிசியன் ஒருவர் இதுவரை அவரது சமூக வலைதள பக்கத்தில் பல பிரபலங்களின் படத்தின் பாடல்களை கீபோர்டு மற்றும் செல்போன் கீபோர்டு ஆப்பில் வாசித்து வீடியோவாக அப்லோட் செய்து இருந்தாலும்,பெரிய அளவில் அவரது வீடியோக்கள் இதுநாள்வரை பார்வையாளர்களையும், வரவேற்பை பெறவில்லை.ஆனால் தற்பொழுது டான் படத்தின் ஜல புல ஜங்கு பாடலை தனது கீபோர்டில் வாசித்து வீடியோவை அப்லோட் செய்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் வாழ்த்து
இந்த வீடியோவை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், "நீ தான்யா உண்மையான டான்" என்று மனதார பாராட்டியும் வாழ்த்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.பிரபலங்கள் ஒரு வீடியோவை ஷேர் செய்தால் சொல்லவா வேண்டும்...!? திடீரென இணையத்தில் ட்ரெண்டாகி லைக்குகளையும் கமெண்டுகளையும் வாரிக் குவித்து வருகிறது. சிவகார்த்திகேயன் பாராட்டை சற்றும் எதிர்பாராத அந்த கீ போர்ட் பிளேயர் சந்தோஷத்தில் திக்குமுக்காடி சிவகார்த்திகேயனுக்கு மனமுருகி நன்றி தெரிவித்துள்ளார். இதுவரை இந்தப்பாடல் சம்பந்தமான பல்வேறு வீடியோக்களை சிவகார்த்திகேயன் தனது பட புரமோஷனுக்காக ஷேர் செய்திருந்தாலும், இந்த கீ போர்ட் பிளேயர் இன் திறமைக்கு மதிப்பு கொடுத்து அவரது வீடியோவை பிரபலமாக்கிய சிவகார்த்திகேயனுக்கு பல்வேறு தரப்பு ரசிகர்களும் வாழ்த்துக்களையும் நன்றியும் கூறி வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications