Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூவு கூட நாறு போல... ஜோடியாக சினேகன், கன்னிகா செய்த செயல்.. வாழ்த்தும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடலாசிரியர் சினேகனோடு அவருடைய மனைவி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

புதுமண தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைத்த சினேகன் கன்னிகாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

திருமண வீட்டில் கன்னிகா மற்றும் சினேகன் ஜோடி பொருத்தத்தை பார்த்து ரசிகர்கள் பலர் ஆசிர்வாதங்களை அள்ளி தெளிக்கிறார்கள்.

அப்போவே தொடங்கிய காதல்

அப்போவே தொடங்கிய காதல்

சினிமா துறையை சார்ந்த பிரபல ஜோடிகள் ஆன சினேகன் மற்றும் கன்னிகா ரவி தற்போது திருமண விருந்தில் கலந்துகொண்டு தங்களுடைய காதலை அனைவருக்கும் வெளிகாட்டி இருக்கின்றனர். பாடலாசிரியர் சினேகன் என்று சொன்னதும் பலருக்கும் அவருடைய முகம் தெரியாமல் இருந்த காலகட்டத்திலேயே அவரை காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்ட கன்னிகாரவி தான் தன்னுடைய காதலையும் கணவர் மீது வைத்திருக்கும் பாசத்தை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளிக்காட்டி கொண்டிருக்கிறார்.ரசிகர்கள் பெரும்பாலும் முணுமுணுக்கும் பாடல்களின் சொந்தக்காரராக இருக்கும் சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமாக பிரபலம் அடைந்து விட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகனை பார்த்த பிறகு தான் பலருக்கும் இவர் தான் நமக்கு பிடித்த பல பாடல்களை எழுதியவரா?? என்ற கேள்விதான் எழுந்தது. அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் உடைய கட்டிப்பிடி வைத்தியம் பலரைக் கவர்ந்தது. அது மட்டுமல்லாமல் நெட்டிசன்களை கலாய்க்கவும் வைத்திருந்தது. அனைவரிடமும் இணக்கமாகவும் அதே நேரத்தில் தன்னுடைய காரியத்தில் கவனமாகவும் இருந்த சினேகன் பலருடைய கவனத்தை ஈர்த்திருந்தார். அதனால் தான் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்து. அவருக்கு ரசிகர்களும் ஆதரவு கொடுத்து வந்தனர்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

திரைத்துறையில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது என்பது வழக்கமான ஒன்றுதான். அதுபோலத்தான் சினேகன் மற்றும் கன்னிகா ரவி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் இவர்களுடைய வயது வித்தியாசத்தை பற்றி பலர் கலாய்த்து வந்தாலும் போகப் போக இவர்கள் இருவரின் அன்பை பார்த்து வாழ்த்துக்களை கூறத் தொடங்கி இருக்கின்றனர். தங்களைப் பற்றி எவ்வளவோ நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாத இந்த ஜோடி தங்களுடைய துறையில் தற்போது பிஸியாகவே இருந்து வருகின்றனர்.

ஆடியில சேதி சொல்லி

ஆடியில சேதி சொல்லி

சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தற்போது திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அந்த திருமண வீட்டிலேயே இவர்களும் ஒரு போட்டோ சூட் எடுத்து அதை அப்படியே விநாயகர் சதுர்த்தியில் இன்ஸ்டாகிராமில் தட்டி விட்டிருக்கின்றனர். ஆடியில செய்தி சொல்லி எனும் பாடலுக்கு சினேகன் மற்றும் கன்னிகா ரவியின் க்யூட்டான எக்ஸ்பிரஷனை பார்த்த ரசிகர்கள் பலர் நீங்கள் தான் சூப்பர் ஜோடி என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+