எதிர்பார்த்தது தப்பா..?காத்திருந்தவங்களுக்கு சன் டிவி வைத்த ட்விஸ்ட்.. என்ன பாஸ் இப்படி பண்ணலாமா!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ப்ரோமோவுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

எதிர்நீச்சல் ப்ரோமோவுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் அதிர்ச்சி மட்டும்தான் மிஞ்சியது என்று பலர் வெறுப்புடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

ப்ரோமோவில் விளம்பரம் போடலாம் ஆனால் ப்ரோமோ முழுக்க விளம்பரமா? ? என்பதுதான் பலருடைய வாதமாக இருந்து வருகிறது.

 ஆரம்பம் இங்கு இருந்து தான்

ஆரம்பம் இங்கு இருந்து தான்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எப்போதுமே ரசிகர்களின் மத்தியில் தனி வரவேற்பை பெற்றிருக்கும். ஆரம்ப காலகட்டத்தில் சீரியல்கள் என்றாலே அனைவரும் பார்ப்பது சன் டிவி சீரியல் ஆகத்தான் இருக்கும். இந்த சேனலின் வளர்ச்சியை பார்த்து தான் பல சேனல்கள் ஒளிபரப்பாகி இந்த சேனலுக்கு தகுந்தது போல புது புது சீரியல்களை அறிமுகப்படுத்தி வந்தனர். அது மட்டும் அல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக சமையல் முதல் சீரியல் வரை ஆட்டம் பாட்டம் என அனைத்தையும் காப்பி அடித்து புதுவிதமாக ஒவ்வொரு சேனல்களிலும் புது புது ப்ரோக்ராம் ஒளிபரப்பி வந்தனர்.

புதுசா சேர்ந்த சீரியல்

புதுசா சேர்ந்த சீரியல்

இப்போதும் டி ஆர் பி யில் முன்னணியில் இருக்கும் சன் டிவியில் சீரியல்கள் பார்க்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.ரோஜா, கயல், வானத்தைப்போல, சுந்தரி, தமிழும் சரஸ்வதியும் என பல சீரியல்கள் ஹிட் லிஸ்டில் இருந்து வருகிறது. இந்த வரிசைகள் தற்போது எதிர்நீச்சல் சீரியலும் இடம் பிடித்திருக்கிறது. இந்த சீரியலின் ரசிகர்கள் பலர் சீரியலின் சுவாரசியத்தை தெரிந்து கொள்வதற்காகவே ப்ரோமோவை பார்த்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் சீரியல் பார்க்கிறார்களோ இல்லையோ ப்ரோமோவை மட்டும் பார்த்து இந்த வாரம் இப்படித்தான் என்பதை கணித்து விடுகிறார்கள்.

திருச்செல்வம் புது சீரியல்

திருச்செல்வம் புது சீரியல்

தற்போது பல வருடங்களுக்குப் பிறகு திருச்செல்வம் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். இவருடைய இயக்கத்தில் வரும் சீரியல்கள் எப்போதுமே ரசிகர்களின் மத்தியில் தனி வரவேற்பு பெற்று இருக்கும். அதே நம்பிக்கையை தற்போதைய எதிர்நீச்சல் சீரியலும் வீணாக்காமல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த வாரம் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனை எதிர்த்து குணசேகரின் வீட்டில் பெண்கள் பங்க்ஷனை நடத்தி வருகிறார்கள். இதில் அவர்கள் முதல் முறையாக சுடிதார் அணிந்து குணசேகரனுக்கு பயப்படாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள். இது குணசேகரனுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர். இந்த நிலையில் இதற்கான ப்ரோமோ எப்போது வரும் என்று பலரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்களாம்.

 ப்ரோமோவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்

ப்ரோமோவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்

இந்த நிலையில் பல ரசிகர்கள் எப்போது இந்த சீரியலுக்கான ப்ரோமோ வரும் என்று அடிக்கடி ஆன்லைனில் செக் பண்ணிக் கொண்டே இருந்தார்களாம். தற்போது கடைசியாக அதை ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி ப்ரோமோ வந்தாலும் கடைசியில் ரசிகர்கள் அதிர்ச்சியாகும் வகையில் ப்ரோமோவில் அதிகமான நேரம் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் விளம்பரம் வந்துவிட்டதாம். கடைசியாக ஒரு சில நொடிகள் மட்டுமே இந்த சீரியலுக்கான ப்ரமோ ஒளிபரப்பானதால் ரசிகர்கள் காண்டாகி இதை வைத்து தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரோல்களால் ஓட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+