எதிர்நீச்சல் கதிர் யார் தெரியுமா?.. சினிமாவில் டாப் கதாநாயகிக்கு ஜோடி..யாருக்கும் தெரியாத மறுபக்கம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மூலமாக அனைவருடைய திட்டல்களையும் வாங்கி வரும் கதிரை அனைவரும் விபு என்று தான் அழைப்பு வருவார்களாம்.
சீரியலில் கதிர் கேரக்டர் எப்படி இருக்கிறதோ அதுதான் நிஜ வாழ்க்கையிலும் விபு கேரக்டராம்.
விபு சீரியலில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் நடித்திருக்கிறார் குறிப்பாக ஹன்சிகாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறாராம்.

நிஜத்திலும் அப்படித்தான்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து விட்டது. இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி ஒரு சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அந்த கேரக்டராகவே ரசிகர்களின் மனதில் பதிந்து விடுகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் அதிகமாக திட்டி தீர்க்கும் ஒரு கேரக்டராக இருக்கும் கதிர் நிஜப் பெயர் ஜெகதீஸ்தானால். ஆனால் இவரை எல்லோரும் விபு என்று தான் கூப்பிடுவர்களாம். இவருடைய சொந்த ஊர் ஊட்டி தானாம். இவர் சீரியலில் மட்டும் தான் கோவக்காரராகவும், பாசக்காரராகவும் இருப்பவர் இல்லையாம். நிஜ வாழ்க்கைகளும் இப்படித்தான் இருந்து வருகிறாராம்.

முதல் திரைப்படம்
சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது கூட துறுதுறுவென இவர் இருந்து வந்தாலும் டக்கென்று கோவப்படுவதில் இவர் கதிர் கேரக்டரை நினைவுபடுத்தி விடுவாராம். மல்லுவேட்டி மைனராக இந்த சீரியலில் வலம் வந்து கொண்டிருக்கும் விபு பல சீரியல்களில் நடித்திருக்கிறார். விபு ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு பாடகராகவும், மாடலாகவும் இருந்து வருகிறாராம். ஆனால் அதிகமாக பிடித்தது இவருக்கு நடிப்பு தானாம். அதனாலே நடிப்பில் மூலமாக தனது திறமையை காட்ட வேண்டும் என்று முதன் முதலாக அநாகரிகம் எனும் திரைப்படத்தின் மூலமாகத்தான் இவர் நடிகராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

ஹன்சிகாவுக்கு மாப்பிள்ளை
முதல் திரைப்படம் அந்த அளவிற்கு இவருக்கு பெரிய அளவில் பெயரை வாங்கி கொடுக்கவில்லை என்றாலும் இவரை நடிகராக காட்டி இருக்கிறது. அதைத் தொடர்ந்து இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் ஹன்சிகாவுக்கு மாப்பிள்ளை ஆக நடித்திருக்கிறார். மணமேடையில் ஹன்சிகாவோடு இவர் இருக்கும் புகைப்படத்தில் பார்த்தால் யாருக்கும் அது எதிர்நீச்சல் கதிர் தான் என்று நம்பவே முடியாது. அந்த அளவிற்கு அவர் அமைதியின் சொரூபமாக வெளிநாட்டு மாப்பிள்ளையாக ஜம்முன்று உட்கார்ந்திருப்பார். அதைத்தொடர்ந்து இவர் அடிமேளம் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

எதிர்நீச்சல் கதிர்
திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அழகு, கல்யாணப்பரிசு, விதி அதோடு திகில் சீரியல் ஆன பைரவி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். சீரியலாக இருந்தாலும் சரி திரைப்படமாக இருந்தாலும் சரி அந்த கேரக்டராகவே மாறிவிடும் கதிர் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஒரு லுங்கியோடு கலர் கலர் சட்டையோடு இவர் எப்போதும் திமிறி கொண்டு இருக்கும் கேரக்டரை பார்த்து ரசிகர்கள் பலரும் கழுவி கழுவி ஊத்தி வந்தாலும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். அதுவும் இவருக்கு அவருடைய ஜோடியாக நடிக்கும் நந்தினிக்கும் ஜோடி பொருத்தமும் இந்த சீரியலில் அமோகமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications