Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்கள் ரெண்டு பேருமே வேண்டாம்.. நான் போய் பார்க்கிறேன்.. கமல் குறித்து தாடி பாலாஜி சொன்ன ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் கமல்ஹாசன் தன்னிடம் ஒரு விஷயம் சொன்னதாக தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    மகளின் வாழ்க்கை வீணா போகுது.. மனைவியிடம் இருந்து மீட்டுக்கொடுங்கள் - தாடி பாலாஜி

    சென்னையை சேர்ந்தவர் தாடி பாலாஜி. இவர் டெலிவிஷன் ஷோக்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார். சில படங்களில் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். விவேக்குடன் இவர் நடித்த ஒரு காமெடி செம ஹிட்!

    இவர் குக் வித் கோமாளி, பிக்பாஸ் சீசன் 2 ஆகிய நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் இவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் கலந்து கொண்டுள்ளார்.

    நித்யா

    நித்யா

    இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் பாலாஜியும் நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இருவரையும் சேர்த்து வைக்க நண்பர்கள் முயற்சித்து வந்தனர்.

    பிக்பாஸ் சீசன் 2

    பிக்பாஸ் சீசன் 2

    இந்த நிலையில் இவர்கள் சேருவதற்கு ஒரு வாய்ப்பாக பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் அழைக்கப்பட்டனர். அங்கு இருவரும் சேர்ந்தது போல் காண்பிக்கப்பட்டது. ஆனால் வெளியே வந்தவுடன் அவர்கள் இருவரும் மீண்டும் பிரிந்தனர். இந்த நிலையில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் தாடி பாலாஜி புகார் கொடுத்தார்.

    சமூகவலைதளங்கள்

    சமூகவலைதளங்கள்

    அதில் தனது மகளை நித்யா சமூகவலைதளங்களில் டான்ஸ் ஆட விடுகிறார். அந்த வீடியோவுக்கு கீழ் வரும் கமென்டுகளை ஒரு தந்தையாக தன்னால் படிக்கவே முடியவில்லை. எனவே எனது மகளை மீட்டு தருமாறு கேட்டிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து நித்யாவிடம் கேட்ட போது அவர் எல்லாவற்றையும் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

    பிக்பாஸில் கமல்

    பிக்பாஸில் கமல்

    மேலும் பிக்பாஸில் கமல் அத்தனை அட்வைஸ் செய்தாரே என கேட்ட போது நித்யா, கமலை பற்றியெல்லாம் பேசாதீங்க, அவர் ஒரு வொர்ஸ்ட் கேரக்டரை என் லைஃப்லயே பார்த்ததில்லை என்றார். மேலும் அவர் குறித்து பேசுவதற்கு என்னிடம் நிறைய கன்டென்ட் இருக்கிறது என்றார்.

     என்ன அட்வைஸ்

    என்ன அட்வைஸ்

    நித்யா கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாலாஜி கூறுகையில், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து வந்தவுடன் கமல் சார் என்னை ஆபிஸுக்கு வரவழைத்தார். அப்போது மகளை போர்டிங் பள்ளியில் விட்டு விடுங்கள். உங்கள் இருவரது தொல்லையும் இருக்காது. வாராவாரம் முடிந்தால் நித்யாவும் போய் பார்க்கட்டும், நீங்களும் போய் பாருங்கள். நீங்கள் இரண்டு பேரும் போகாவிட்டால் நான் போய் பார்க்கிறேன் என கூறினார் என பாலாஜி தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+