படிக்க வைக்கவில்லை..படிக்க வைத்து இருந்தால் நன்றாக படித்து இருப்பேன்..தாமரையின் ஏக்கம்
சென்னை: படிப்பின் அருமை கிடைக்கவில்லையே என ஏக்கத்தோடு தாமரைச்செல்வி பேசியுள்ளார்.
இளமைக்காலத்தில் வறுமையின் காரணமாக கிடைக்காத கல்வியை நினைத்து இப்போதும் மனம் கலங்கிய தாமரை செல்விக்கு ஆறுதல்களை ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
வாழ்வின் எவ்வளவு பெரிய இடத்தை அடைந்தாலும் கல்வி என்றுமே சிறப்பு தான் என்பதை தற்போது தாமரைச்செல்வி நிரூபித்துள்ளார்.

தாமரையின் ஃபீலிங்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெறும் ஒருசில செயல்கள் ரசிகர்கள் மனதை அதிகமாக கவர்ந்து விடும். அந்த மாதிரிதான் நேற்றைய எபிசோட்டில் எதார்த்தமாக தாமரைச்செல்வி பேசிய வார்த்தைகள் பலருடைய மனதையும் வருடி விட்டது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள ரசிகர்கள் அதிகமாக ரசித்து வரும் நிலையில் பலருக்கும் பரிச்சயமான மற்றும் பிடித்த போட்டியாளராக இருக்கும் தாமரைச்செல்வி தன்னுடைய மனக்குமுறல்களை ஃபீலிங்கா காட்டியிருக்கிறார்.

ரசிகர்களின் மனதை பாதித்துவிட்டது
என்னதான் ஒருவர் சந்தோஷமாக இருந்தாலும் ஆரம்பகட்டத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் யாராலும் மறக்க முடியாது. அது மட்டுமல்லாமல் அந்த கஷ்டங்களால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத நிலையை ஒரு சில காலங்களுக்குப் பிறகு நினைத்து பார்க்கும் வலி மிகவும் பெரியது தான். அதை தற்போது தாமரைச்செல்வி தன்னுடைய முகத்தில் காட்டியுள்ளார். அதை பார்த்து அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஏற்கனவே தாமரைச்செல்வி தன்னுடைய கஷ்டங்களை அனைவருக்கும் கூறியிருந்தாலும் நேற்றைய எபிசோட்டில் அவர் பேசிய வார்த்தைகள் பலருடைய மனதையும் பாதித்து இருக்கிறது.

கிடைக்காத கல்வி செல்வம்
ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே பரிச்சயமாக ஒரு நடன கலைஞராக இருந்த தாமரை செல்வி தற்போது பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாக இருந்தாலும், இவர் குழந்தையாக இருக்கும்போது கிடைக்காத கல்வி நினைத்து தற்போதும் மனதுருகி இருப்பதை பார்த்து பலர் வேதனை அடைந்து இருக்கின்றனர். என்ன தான் இவர் சிரித்து பேசியும், சண்டை போட்டும் இந்த நிகழ்ச்சியில் சுவாரசியத்தை கூட்டிக்கொண்டு இருந்தாலும் ஒரு சில நேரங்களில் இவர் வெகுளித்தனமாக செய்யும் ஒரு சில செயல்கள் பலரையும் கவர்ந்து விடுகிறது. அந்த மாதிரி இப்போதும் தாமரை பலரும் யோசிக்கிற ஒரு செயலைத்தான் செய்து இருக்கிறார்.

ஏங்கும் மனது
இவருடைய இளமைக் காலத்தில் வீட்டில் வசதி இல்லாததால் இவருடைய பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லையாம். அதனால் நேற்றைய எபிசோட்டில் இவர் சிபியிடம் நானும் படிக்க வாய்ப்பு கிடைத்து இருந்தால், நன்றாக படித்து இருப்பேன் என்று கூறியிருக்கிறார். அப்போ எங்க வீட்டில் படிக்க வைக்க முடியாததால் தான் நான் படிக்கவில்லை என்று வேதனையை தெரிவித்திருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் பல பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை படிக்க வைப்பதற்காக எவ்வளவோ போராடிக் கொண்டு இருந்தாலும் ஒரு சில குழந்தைகள் படிப்பை ஓட்டி அடிக்க நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இவருடைய இந்த உருக்கமான வார்த்தை பலருடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications