மகனைக் கண்டு குளிர்ந்து போன தாமரை...போட்டியாளர்களை வாயடைக்க வைத்த 'குட்டி தாமரை’
சென்னை: இன்றைய முதல் ப்ரமோவில் உணர்ச்சிவசப்பட வைக்கும் தருணம் நிகழ்ந்துள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Recommended Video
இந்த ஒரு தருணத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்திருந்தனர் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
தாயின் மடியில் சேர்ந்த கன்றினை போல மகனைப் பார்த்ததும் துள்ளிக் குதித்த தாமரையைப் பார்த்து ரசிகர்கள் உள்ளம் குளிர்ந்து போய் இருக்கிறார்களாம்.

முதல் ப்ரமோ
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து வரும் ஃப்ரீஸ் டாஸ்க் மூலமாக போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறார். அதில் ரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்பில் இருந்த போட்டியாளர்களில் தாமரை செல்வியும் ஒருவர். இவருடைய குடும்பத்தில் இருந்து யார் வரப்போகிறார்கள், அப்போது எப்படி இருக்கப் போகிறது என்று பலர் கருத்து தெரிவித்து கொண்டிருந்தனர். தற்போது அதற்கான விடை இன்றைய முதல் ப்ரமோவில் கிடைத்துவிட்டது.

படபட பேச்சு
தன்னுடைய மகன் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டான். அவன் எப்படியாவது என்னை புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்து அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் தாமரைச்செல்வி, இன்றைய முதல் ப்ரமோவில் அவருடைய மகன் வந்துவிட்டார். மகனின் வருகையை எதிர் பாராத தாமரைச்செல்வி துள்ளிக் குதித்தபடி அவரை கொஞ்சிக் குலாவுவதை பார்த்ததும் பலருக்கும் கண்களில் நீர் வந்துவிட்டதாம். என்னதான் தாமரைச்செல்வி படபட பேச்சுக்காரராக இருந்தாலும் அவருடைய நடவடிக்கை பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

இன்ப அதிர்ச்சி
கிராமத்து பெண்ணாக இந்த போட்டியில் அடி எடுத்துவைத்து, நன்றாக படித்து பல நாடுகளுக்கு சென்று பல்வேறு அனுபவங்கள் இருக்கும் போட்டியாளர்கள் இடம் வந்து பார் என்று இருக்கும் தாமரை செல்விக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு தாமரைச்செல்வி அந்த அளவிற்கு பிரபலம் ஆகவில்லை என்றாலும் தற்போது அதிக அளவில் பிரபலம் அடைந்து விட்டார். அதை வீட்டிற்குள் வரும் ஒவ்வொரு போட்டியாளர்களின் உறவினர்களும் உறுதிப்படுத்திக் கொண்டு சென்று விடுகிறார்கள். இந்த நிலையில் தன்னைப் பற்றி புரிந்து கொள்வாரா தன்னுடைய மகன் என்று நினைத்துக் கொண்டிருந்த தாமரைச் செல்விக்கு இன்று இன்ப அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.

'குட்டி' தாமரைச்செல்வி
தாமரைச்செல்வி தான் யாருக்கும் பயப்படாமல் எதையும் துணிந்து பேசி விடுவார் என்று பார்த்தால் அவருடைய மகன் அவருக்கு மேலாக இருக்கிறார் என்று பலரும் கூறி வருகின்றனர். போட்டியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தன்னுடைய அடாவடியான மற்றும் கேட்பவர்கள் மிரண்டு போகின்ற மாதிரி தாமரைச் செல்வியின் பையனும் பேசியிருக்கிறார். இவருடைய பேச்சை பார்த்ததும் போட்டியாளர்கள் அப்படியே வாயடைத்துப் போய்விட்டார்கள். போட்டியாளர்களே அப்படி என்றால் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களை சொல்லவா வேண்டும். இது குட்டி தாமரை செல்வி தான் என்று கூறி வருகிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications