விஜய் டிவி செய்வதை கணவரிடம் போட்டுக் கொடுத்த தாமரை...வச்சு செய்யும் நெட்டிசன்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் உள்குத்துகளை தாமரைசெல்வி தன்னுடைய கணவரிடம் போட்டுக் கொடுத்துள்ளார்.
Recommended Video
தன்னுடைய வழக்கமான பேச்சால் அனைத்து உண்மைகளையும் உளறி விட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இப்படி எல்லாம் கூட பிக்பாஸ் செய்கிறதா என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

ரசிகர்களை கவர்ந்த சீசன்
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் வித்தியாசமான ஒரு சீசன் ஆக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர். காரணம் இந்த சீசனில் அதிகமான புதுமுகங்கள் அறிமுகமானதும் போட்டியாளர்கள் அனைவரும் விளையாட்டை பற்றி நன்றாக புரிந்து கொண்டுதான் இந்த விளையாட்டிற்குள் அடி எடுத்து வைத்து இருக்கின்றனர். அதனால் இவர்கள் தங்களுடைய பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக பார்த்து பார்த்து விளையாடி வருவதை பார்த்து கொண்டிருந்தனர். இதனால் ஆரம்பத்தில் அன்பாகவும், ஆறுதலாகவும் இருந்ததால் போட்டியாளர்களை ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது.

இது நடிப்பா?? உண்மையா??
ஆரம்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்ததைப் பார்த்ததும் இந்த சீசன் இப்படிதான் இருக்கும் என்று பலர் அபிப்பிராயங்களை தெரிவித்து கொண்டிருந்த நேரத்தில் இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் மூன்றாவது வாரத்தில் போட்டியாளர்களுக்குள் பிரச்சனைகள் புதிது புதிதாக தொடங்க ஆரம்பித்துவிட்டது. இவர்களா இப்படி மாறிவிட்டார்கள் என்று பல போட்டியாளர்கள் கூறி வந்தனர். ஆனால் என்னதான் இவர்கள் சண்டை போட்டாலும் அடுத்த நிமிடம் ஒன்றும் நடக்காதது போல பழகுவதை பார்க்கும் போது இவர்கள் உண்மையில் இப்படி தானா அல்லது நடிக்கிறார்களா என்று பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

உண்மையை கூறிய தாமரைச்செல்வி
பிக்பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொரு டாஸ்க்களிலும் ஒவ்வொரு புது பிரச்சனை ஏற்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. ஆரம்பத்தில் இந்த விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாமல் திணறி வந்த தாமரைச்செல்வி நாட்கள் செல்ல செல்ல அனுபவம் அதிகம் உள்ள போட்டியாளர்களையும் வந்து பார் என்று நடந்து கொண்டார். அதை பார்க்கும் போது அனைவருக்குமே வியப்பாக இருந்தது. ஒரு கிராமத்துப் பின்னணியில் இருந்து வந்த தாமரைச்செல்வியே இப்படி இருக்கிறாரே என்று அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். அந்த உண்மையைப் பற்றி தற்போது தன்னுடைய வெகுளித்தனமான பேச்சால் தாமரை செல்வி தன்னுடைய கணவரிடம் தெரிவித்துள்ளார்.

கலாய்க்கும் ரசிகர்கள்
நேற்றைய எபிசோட்டில் பிக்பாஸ் வீட்டிற்குள் தாமரைச் செல்வியின் கணவர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். வந்த பிறகு தாமரைச்செல்வி பல அறிவுரைகளை வழங்கி கொண்டிருந்தார். அப்போது நாங்கள் சண்டை போட எல்லாம் செய்யவில்லை. ஆனா "அவங்களே போட சொல்லி சொல்லுறாங்க" அதனாலதான் சண்டை போடுகிறோம் என்று அவர் பேசியது மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கண்களில் மாட்டி விட்டது. அதனால் விஜய் டிவியை வச்சி விளாசி வருகின்றார்கள். விஜய் டிவிதான் இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை போட சொல்லியதா என்று பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதனால்தான் ப்ரமோக்களில் சண்டை அதிகமாக காணப்படுகிறதா?? என்று கேட்டு வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications