மாஸ்டர் செப்பில் களமிறங்கும் கதாநாயகி...அப்போ இந்த வாரம் தரமான சம்பவம் இருக்கு..!
சென்னை: டி ஆர் பி யை கூட்டுவதற்காக மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் கதாநாயகியை களமிறக்கி அசத்தி விட்டார்கள்.
அப்போ இந்த வாரம் தரமான சம்பவம் இருக்கு என்று ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் ஆர்வத்தில் பொங்குகிறார்களாம்.
அதுவும் இளைஞர்களை வசியப்படுத்தி கொண்டிருக்கும் நிக்கி கல்ராணி எனட்ரியை பார்த்ததும் ரசிகர்கள் துள்ளிக்குதித்து கமெண்டுகளை குவிக்கிறார்கள்.

இந்த ஐடியா நல்லா இருக்கே
டி ஆர் பி யை கூட்டுவதற்காக புதுசு புதுசா ஏதாவது செய்தால்தானே ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதை தற்போது சன் டிவியும் புரிந்து கொண்டுவிட்டது. ஏற்கனவே சன் டிவியில் ரியாலிட்டி ஷோ வருகிறது என்றதுமே ரசிகர்கள் ஆர்வத்தில் இருந்தனர். அதுவும் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்று தெரிந்ததும் பிரம்மாண்டமாக இதனை வரவேற்க தொடங்கிவிட்டார்கள். சமையல் நிகழ்ச்சி என்றாலும் ஜாலியாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் இருக்கிறது. ஏனென்றால் இதில் முழுக்க முழுக்க சமையல் மட்டுமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கும் போது விஜய் டிவியில் முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போன்று இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இது அதை விட மாறுபட்டு இருந்ததால் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக ஆகிவிட்டதாம். ஆனாலும் இதற்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

தரமான சம்பவம் இருக்கு
சமையலை விரும்பும் ரசிகர்கள் மட்டுமல்லாமல், சமையலில் புதியதை கற்றுக்கொள்ளும் ரசிகர்களும் இந்த நிகழ்ச்சிக்கு அதிகமாக சப்போர்ட் கொடுத்து வருகின்றனர். ரசிகர்களின் பேராதரவோடு இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு எபிசோடுகளை கடந்து வந்திருந்தாலும், தற்போது டிஆர்பியை கூட்டுவதற்காக நடிகை ஒருவரை இறக்கினால் தான் நல்லது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அதனாலேயே தற்போது இளைஞர்களின் எழுச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நிக்கி கல்ராணி ஹெஸ்ட்டாக வரவேற்றிருக்கிறார்கள். இவருடைய என்ட்ரி பார்த்ததும் இவர் கண்டஸ்டன்டாக வருகிறாரா? அல்லது விஜய் சேதுபதிக்கு துணையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறாரா என்று எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே இவரும் விஜய்சேதுபதியின் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறார். அதனாலேயே அப்போ இனி விஜய் சேதுபதி மட்டும் தனியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இல்லை. இவரும் சேர்ந்து விட்டார். விஜய் சேதுபதிக்கு திரைப்படங்களில் தான் ஜோடி இருக்கனுமா என்ன நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கும் ஜோடி இருந்தால் நல்லா தானே இருக்கிறது என்று ரசிகர்களும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அசத்தலான டாஸ்க் தான்
ஆனால் தற்போது சன் டிவியில் இருந்து வெளியான ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். காரணம் வழக்கமாக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அதில் கலந்துகொள்ளும் கண்டஸ்டன்களுக்கு தான் டாஸ்க் கொடுப்பார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளருக்கும் கொடுத்துவிட்டார்கள். நடுவர்கள் டாஸ்க் கொடுத்தாலும் நாங்கள் அதில் சளைத்தவர்கள் அல்ல எங்களுடைய திறமையை காட்டுகிறோம் என்று விஜய் சேதுபதியும், நிக்கி கல்ராணியும் கலக்கலாக சமையலை தொடங்கிவிட்டார்கள். இவர்கள் இருவரும் சமையல் செய்யும்போது பலர் அது என்ன டிஷ்ஷாக இருக்கும் என்று கேட்டு வருகின்றனர். என்னவாக இருந்தாலும் சரி அது மாஸ்டர் செஃப் தரத்தில் இருக்க வேண்டும் என்று நடுவர் சொல்ல, நான் பிரபஷனல் சமையல் மாஸ்டர் எல்லாம் இல்லை. லாக்டோன் சமையல் மாஸ்டர் தான் என்று நிக்கி கல்ராணி கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்.

இப்பவே கண்ண கட்டுதே
இந்த ஜாலியான ப்ரோமோவை பார்த்ததும் இந்த எபிசோடு எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் கேட்க ஆரம்பித்துவிட்டனர். இது சனிக்கிழமை வருமா அல்லது ஞாயிற்றுக்கிழமை இந்த எபிசோடுகள் வருமா என்றுதான் கேட்டு வருகிறார்கள். எப்படியோ விஜய் சேதுபதியும் தனக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் சமையலில் இறக்கி ஒருவழியாக சமையலை முடித்து விட்டார். ஆனால் அது என்ன மாதிரி இருந்தது என்றுதான் நடுவர்கள் எப்படி சொல்லப்போகிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். எப்படியோ புது ஐடியாக்களை செய்து ப்ரோமோவை வெளியிட்டு பிரம்மாண்டமான சமையல் நிகழ்ச்சியை பிரமாண்டமாக வெற்றி பெற செய்துவிடவேண்டும் என்று சன் டிவி முடிவெடுத்திருக்கிறது. இந்த முயற்சிக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும் இந்த வாரம் மாஸ்டர் செஃப் டிஆர்பி எகிற போகிறதா இல்லையா என்று என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications