ஒரு வாரமா ஒரே கான்செப்ட்டை சுத்தியே வராங்களே ராஜா ராணி..கதறும் ரசிகர்கள்
சென்னை: விறுவிறுப்பு வேண்டுமென்பதற்காக சீரியலில் ஒரு வாரமா ஒரு கான்செப்டில் ராஜா ராணி ப்ரோமோ வலம் வந்து கொண்டிருக்கின்றது.
ஒரே ஆக்சிடென்ட் சீனை எத்தனை நாட்களுக்குத்தான் பார்த்துக்கொண்டு இருக்க என்று மீம்ஸ்களை நெட்டிசன்கள் பறக்கவிட்டு வருகின்றனர்.
சீரியல் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட்களில் கொந்தளித்து வருகின்றனர்.

சினிமாவையே மிஞ்சிருவாங்க போல
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு பிடித்துவிடுகிறது. அந்த வகையில் ராஜா ராணி 2 சீரியலும் ரசிகர்களின் மனதை கவர்ந்த சீரியலாக தான் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியல் பிறமொழி சீரியலின் தழுவலாக இருந்தாலும் இதற்காகவே பல ரசிகர்கள் உருவாகி விட்டனர். இந்த சீரியலில் ராஜா ராணி முதல் பாகத்தில் நடித்த ஆலியா மானசா ஹீரோயினி ஆகவும் கலர்ஸ் டிவியில் திருமணம் சீரியலில் கதாநாயகனாக நடித்த சித்து கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்களின் இருவரின் நடிப்பும் தத்ரூபமாக அமைந்து விட்டாலும் தற்போது நெட்டிசன்கள் கையில் இந்த சீரியல் மாட்டிக் கொண்டு விட்டது.

பஸ் ஆக்சிடெண்டில் மிரட்டல்
ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலும் இதேபோலத்தான் பல நாட்களாக ஒரே சீனை ஒளிபரப்பி வந்ததால் நெட்டிசன்கள் கொதித்தெழுந்து தங்களுடைய கோபங்களையும், சந்தோஷங்களையும் மீம்ஸ்களில் போட்டு பாரதிகண்ணம்மா சீரியலை பங்கமாக கலாய்த்து வந்தனர். இந்த நிலையில் சில நாட்களாக அமைதியாக இருந்த விஜய் டிவி மீண்டும் ராஜா ராணி சீசன் 2வில் தன்னுடைய வேலையை காட்டி விட்டது. ஏற்கனவே இந்த இரு சீரியல்களின் இயக்குனர் ஒருவர் தான் என்று ரசிகர்கள் தெரிந்து வைத்திருந்தாலும் ஒரே மாதிரியா எல்லா சீரியலிலும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பீர்கள். புதுசா எதுவும் கிடைக்கலையா என்று பவுசா கலாய்த்து வருகின்றனர்.

காதல் புரியலையே
ஒரு சீரியலை பார்த்தோ அல்லது ஒரு நடிகையை பற்றியோ மீம்ஸ்கள் பறந்து வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் தற்போது சினிமா கதையை மிஞ்சும் அளவில் ராஜா ராணி சீரியலில் பஸ் ஆக்சிடென்ட் சீன் எடுத்திருக்கிறார்கள். இந்த சீனை பார்த்து நெட்டிசன்கள் மீம்ஸ்களில் வறுத்தெடுத்து வருவது சீரியலின் தீவிரமான ரசிகர்களின் மத்தியில் சிறு மன கவலையாகத்தான் இருந்து வருகிறதாம். இந்த சீரியலில் சந்தியாவாக நடிக்கும் ஆலியா மானசாவின் காதலை சித்து புரிந்து கொள்ளாமல் அவர் விவாகரத்து கேட்டு தான் இந்த வீட்டில் இருந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்து அவசரப்பட்டு விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட்டு சந்தியாவை அவருடைய தோழியின் வீட்டில் விட்டு விடுவதற்காக போனவாரம் பேக்கை கையில் தூக்கி விட்டு கிளம்பிவிட்டார். ஆனால் இந்த வாரமும் முடியப்போகிறது ஆனால் சந்தியா அந்த பஸ்சை விட்டு கிளம்ப வில்லை.

காலாகாலத்துல வீட்டுக்கு போங்க
ஏற்கனவே வீட்டில் சந்தியாவின் குடும்பத்தினர் சந்தியாவை இப்போது தான் ஏற்றுக் கொண்டாலும், அவரைக் கொண்டு இந்த நேரத்தில் வீட்டில் விட போய் விட்டாரே என்று சிலர் சித்துவின் மீது கோபத்திலும் வருத்தத்திலும் இருக்கும் நிலையில் இவர்கள் சென்ற பஸ் ஆக்சிடென்ட் ஆகி விட்டது. சந்தியாவை காணாது தவித்துக்கொண்டிருக்கும் சித்துவும், சந்தியா சீனும் தான் ஒரு வாரமாக விஜய் டிவியில் அடிக்கடி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ப்ரோமோவை பார்த்து நெட்டிசன்கள் தங்களுடைய மனக்குமுறல்களை கமெண்டுகளில் காட்டி வருகின்றனர். எப்படியோ நெட்டிசன்கள் கையில் கிடைத்த இந்த சீரியல் வைரல் ஆகி விடும் போல, அந்த வகையில் தான் சமூகவலைத்தளத்தில் அதிகமாக ராஜா ராணி சீசன் இரண்டுக்கு மீம்ஸ்கள் பறந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இருவருக்கும் அடி ஏதும் இல்லை என்பதால் சீக்கிரத்தில் வீட்டிற்குப் போய் சேருங்க என்று ரசிகர்கள் கமெண்டுகளில் கலாய்த்து வருகின்றனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications