பருத்திவீரன் டாஸ்க்கில் உண்மையான வெற்றி வீரன் ராஜூ தான்...கொண்டாடும் அவருடைய ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வார தலைவர் பதவிக்காக நடந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்தே முதலிடத்தில் விளையாடிய ராஜூவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ராஜூ விளையாட்டில் ஜெயிக்க வில்லை என்றாலும் அவர்தான் உண்மையான பருத்திவீரன் என்று அவருடைய ரசிகர்கள் பட்டங்களை வழங்கி வருகிறார்கள்.

ராஜுவின் கருத்துதான் ரசிகர்களின் வேதவாக்காக இருந்து வருகிறது என்பது தற்போது நிரூபணமாகியிருக்கிறது.

பிரச்சினைக்கு பஞ்சமில்லாத டாஸ்க்

பிரச்சினைக்கு பஞ்சமில்லாத டாஸ்க்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார தலைவர் பதவிக்கும் போட்டிகள் வேற லெவலில் இருந்து வரும். இதில் சண்டை சச்சரவுகளும் பஞ்சமில்லாமல் தான் ஒவ்வொரு முறையும் முடிகின்றது. அதுபோல நேற்றைய எபிசோட்டில் நடந்த இந்த வார தலைவர் பதவிக்கான டாஸ்க்கில் ஆரம்பத்தில் பிரியங்கா மற்றும் தாமரை இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடும்,கருத்து போரும் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. இதில் யார் சரி, யார் தவறு என்று கணிக்க முடியாத வகையில் தான் ரசிகர்கள் குழம்பிப் போயிருந்தனர்.

ராஜுவின் விளையாட்டு

ராஜுவின் விளையாட்டு

ஒரு வழியாக உங்கள் சண்டையை நிறுத்துங்கள் அப்போதுதான் அடுத்த கட்டத்தில் விளையாட்டை கொண்டு போகமுடியும் என்று ரசிகர்களின் கருத்து பிரியங்கா மற்றும் தாமரை காதுகளுக்கு கேட்டு விட்டது போல. அதனால்தான் தங்களுடைய சண்டையை கொஞ்ச நேரத்திற்கு நிறுத்தி வைத்திருந்தனர். அந்த கேப்பில் போட்டியாளர்கள் நிகழ்ச்சிகளை ரசிக்கத் தொடங்கி விட்டனர். அப்போதுதான் ராஜூ வெறித்தனமாக விளையாடிய விளையாட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அழித்துக்கொண்டிருந்தது.

டாஸ்க்கில் அசத்திய ராஜு

டாஸ்க்கில் அசத்திய ராஜு

எப்போதுமே பிஸிக்கல் டாஸ்க்கில் கொஞ்சம் குளறுபடிகளையும், பின் தங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கும் ராஜு நேற்றைய எபிசோட்டில் நடந்த பருத்திவீரன் டாஸ்க்கில் வேற லெவலில் அசத்திவிட்டார். போட்டியாளர்கள் அணைவரையும் விடவும் ஒவ்வொரு சுற்றிலும் அதிகமான பஞ்சுக்களை சேகரித்து முதலிடத்தில் வந்து கொண்டிருந்தார். இவருடைய கடமை உணர்ச்சி தவறாத விளையாட்டை பார்த்து ரசிகர்கள் என்ஜாய் பண்ணி கொண்டு இருந்தனர்.இவர் விளையாடுவதை பார்த்து தான் சக போட்டியாளர்கள் இவர் எவ்வளவு பஞ்சுக்களை வைத்திருக்கிறார் என்பதை அறிந்து அதற்கு தகுந்தது போல எடையை குறைத்துக் கொண்டிருந்தனர்.

ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ராஜு

ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ராஜு

யார் எப்படி விளையாடினாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்னுடைய விளையாட்டை நான் சிறப்பாக விளையாடுவேன் என்று இவர் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டு இருந்தாலும், கடைசி முறையில் அனைவரை விடவும் குறைந்த அளவில் பஞ்சு எடுத்து கொண்டு வந்திருந்தார். அப்போதுகூட இவர் எவ்வளவு பஞ்சு வைத்திருக்கிறாரோ அதற்கு தகுந்தது போல தான் இவர் எடை போட்ட பிறகு அக்ஷரா உள்ளிட்ட ஒருசில போட்டியாளர்கள் அவர்கள் சேகரித்த பஞ்சுகளை எடைபோட வந்திருந்தனர். இதை பார்த்ததும் இந்த போட்டியில் ராஜு ஜெயிக்கவில்லை என்றாலும் நிஜ பருத்திவீரன் ராஜூ தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+