கடைசி நாளில் உமாபதி அவராகவே இல்லை...என்ன நடந்தது.. இதுதான் காரணமா??
சென்னை: கடைசிநாள் டாஸ்கில் உமாபதி யின் செயல்பாடுகள் ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.
முதல் டாஸ்க்கில் இருந்து இவரை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு கடைசியில் அதிர்ச்சியை கொடுத்துவிட்டார்.
உமாபதியின் தோல்வி ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோ
ரியாலிட்டி ஷோ என்றாலே ரசிகர்களை உற்சாகம் அடைய செய்வதாகவும், அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத வகையில் தான் இருக்கும். அப்படி இருந்தால் தான் ரசிகர்களும் அதை ரசித்து வருவார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தாலும் ரசிகர்கள் அதிகமாக பாராட்டியதும் எதிர்பார்ப்பதும் ஒரு சில போட்டியாளர்கள். அதில் உமாபதியும் ஒருவர்.

அனைவரையும் கவர்ந்த குணம்
சர்வைவர் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதில் பலர் திரைத்துறையினர் சார்ந்தவராகவும், ஒருசிலர் மாடல் துறையை சார்ந்தவராகவும், விளையாட்டு வீராங்கனைகள் இதில் கலந்து கொண்டிருந்தனர். அனைத்து போட்டியாளர்களுக்கும் டப் கொடுக்கும் விதமாக தன்னுடைய திறமையை காட்டி ரசிகர்களை மட்டுமல்லாமல் போட்டியாளர்களையும் உமாபதி பல நேரங்களில் மிரட்டியிருக்கிறார். இவருடைய எதற்கும் பயப்படாத குணமும் எப்போதும் கலகலப்பாக இருக்கும் குணமும் ரசிகர்களை அதிகமாக ரசிக்க வைத்திருந்தது.

வெளியேறிய உமாபதி
ஆரம்பத்தில் இருந்த பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தாலும் உமாபதி எப்படியும் இந்த வெற்றிக் கோப்பையை தட்டி விடுவார் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கடைசி நாளில் உமாபதி நடந்து கொண்டது அனைவருக்கும் விசித்திரமாக இருந்தது. உமாபதிக்கும் சரணுக்கும் நடந்த போட்டியில் சரண் வெற்றிபெற்று மூணாவது பைனல் லிஸ்ட் ஆக தேர்வு செய்யப்பட்டார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. உமாபதி தான் எப்படியும் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் பலர் ஃபீல் பண்ணி கொண்டிருந்தனர். தான் விளையாட்டில் கவனமாக விளையாடத்தற்கு காரணம் என்ன என்று அவரே கூறியுள்ளார்.
Recommended Video

இதுதான் காரணமா
சர்வைவர் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து விஜி மற்றும் உமாபதி இடையே பாசமான நட்பு நிலவி வந்தது. இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து பல நேரங்களில் விளையாடிக்கொண்டிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கொண்டிருந்தது. ஆனாலும் விஜி இவரிடம் நான் உன்னை தான் சேவ் செய்வேன் என்று கூறி இருந்தாராம். ஆனால் அவர் வெனசாவை சேவ் செய்துவிட்டார். இந்த ஒரு ஏமாற்றத்தை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று ரொம்பவே ஃபீல் பண்ணி இருந்திருக்கிறார். இதனால் விளையாட்டில் கவனமாக விளையாட முடியவில்லை .தான் ஒரு சென்டிமெண்ட் முட்டாள். அதனால் என்னை ஏமாற்றியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று விரக்தியோடு கூறியிருக்கிறார். இதைக்கேட்டதும் ரசிகர்கள் பலர் ஃபீல் பண்ணி அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications