மகாலட்சுமி பணத்திற்காக திருமணம் செய்து கொண்டாரா..! அட இப்படி சொல்லிவிட்டாரே வனிதா!
சென்னை: சின்னத்திரை நடிகை ஆன மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டது சமூக வலைத்தளத்தில் பல்வேறு யூகங்களை எழுப்பி இருக்கிறது.
மகாலட்சுமியின் திருமணத்திற்கு பிறகு அவரைப் பற்றி நடிகை வனிதா வெளியிட்ட தகவலால் ரசிகர்களின் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறதாம்.
மகாலட்சுமியை பற்றி இப்படியெல்லாம் வனிதா பேசுவார் என்று எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் மிஞ்சி இருக்கிறதாம்.

தொடரும் சர்ச்சைகள்
சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிய நடிகைகளில் ஒருவர் வனிதா என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில் தற்போது அந்த வரிசையில் மகாலட்சுமியும் இருந்து வருகிறார். தான் என்ன செய்தாலும் அது வேறு விதமாக சமுதாயத்தில் காட்டப்படுவதாகவும் தன்னை பற்றி மட்டும் தான் பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வருவதாகவும் வனிதா கூறி வந்தாலும் வனிதா அந்த மாதிரி நெகட்டிவ் கருத்துக்களை எப்போதுமே கண்டு கொண்டது இல்லை. அதுபோல தற்போது நெகட்டிவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கும் மகாலட்சுமியை பற்றி முதல் முறையாக வனிதா பேசியிருக்கிறார்.

ரசிகர்களின் கருத்துக்கள்
சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி சில நாட்களுக்கு முன்புதான் தயாரிப்பாளர் ரவீந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகாலெட்சுமி தொகுப்பாளராக பலருக்கும் பரிச்சயம் ஆனவர். இப்போது சீரியல் களில் அவர் நடித்துக் கொண்டிருந்தாலும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளர்களில் இவரும் ஒருவர். அதனாலே இவருடைய திருமணத்தை பலரும் அதிர்ச்சியோடு பார்த்து தங்களுடைய இயலாமையை சமூக வலைத்தளத்தில் கொட்டி வந்தனர். மகாலட்சுமி தனக்குப் பொருத்தமே இல்லாத ரவீந்திரை கல்யாணம் பண்ணிக் கொண்டார் என்று பலரும் கண்ணீர் வடிக்காத குறையாக கருத்துக்களை பதிவு பண்ணி வந்தனர்.

பரபரப்புக்கு பஞ்சமில்லை
காதலித்து திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இவர்கள் இருவரும் சந்தோஷமாக இருந்தாலும் அவர்களை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் நெட்டிசன்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை போல. அதனால் தான் மகாலட்சுமி விஷயத்தில் என்ன நடந்தாலும் அதை வேற லெவலில் வைரலாக்கி வருகிறார்கள். மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் முடித்து அவருடைய கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை செய்தி சேனல்களில் பரவி வந்தது. அதனை தொடர்ந்து இவருடன் சீரியலில் நடிக்கும் நடிகர் ஒருவருக்கும் இவருக்கும் காதல் என்று அந்த நடிகரின் மனைவி கம்ப்ளைன்ட் கொடுத்து மீண்டும் இவருடைய பெயர் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போதைய திருமணமும் அதில் இணைந்து இருக்கிறது.

வனிதாவின் அறிவுரை
மகாலட்சுமி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று சமூக வலைத்தளத்தில் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அதை பற்றி வனிதா அப்படியெல்லாம் இருக்கவே முடியாது. தயாரிப்பாளர்கள் யாரிடமும் அவ்வளவு பணம் கிடையாது. மகாலட்சுமியும் சும்மா ஒன்றும் இல்லை. அவர் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கதாநாயகிகளுக்கு இணையாக இவருடைய கேரக்டர் இருப்பதால் இவருக்கும் அதிகமான சம்பளம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் மனது ஒத்து திருமணம் செய்து இருக்கிறார்கள். ரவீந்திரிடம் இருக்கும் குணங்களில் ஏதோ ஒன்று மகாலட்சுமிக்கு பிடித்திருக்கிறது. அவர்கள் இருவரும் சந்தோஷமாக இருக்கட்டும் அதை விடுத்து விட்டு இப்படி ஒரு பெண்ணை மோசமான பெயரால் யாரும் காயப்படுத்தக் கூடாது என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications