என்னா தைரியம்! பண்பு! உங்கள் ரசிகையாக இருப்பதில் பெருமை.. வனிதா விஜயகுமார் போட்ட போஸ்ட்!
சென்னை: மனைவியை கேலி செய்த ஆங்கரை ஆஸ்கர் நாயகன் வில் ஸ்மித் ஓங்கி அறைந்ததை வரவேற்ற நடிகை வனிதா விஜயகுமார் நான் உங்கள் ரசிகை என்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 94 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை அறிவிக்க வந்தார் நடிகர் கிறிஸ் ராக்.
அப்போது அவர் வில் ஸ்மித்தின் மனைவி ஜேடா பின்கெட் ஸ்மித்தின் தலைமுடி குறித்து நகைச்சுவையாக பேசினார். ஜேடாவுக்கு உடல்நலப் பிரச்சினை காரணமாக அவரது தலைமுடி உதிர்ந்து கொண்டே வருவதால் அவராகவே மொட்டை அடித்துவிட்டார்.

ராக் கிண்டல்
இந்த நிலையில் தனது மனைவியை ராக் கிண்டல் செய்வதை பார்த்த வில் ஸ்மித்திற்கு கோபம் ஏற்பட்டது. இதையடுத்து கோபமாக மேடைக்கு சென்ற ஸ்மித், கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். பின்னர் எனது மனைவியின் பெயரை சொல்வதை நிறுத்துங்கள் என கோபமாக கூறிவிட்டு தனது இருக்கைக்கு சென்றார்.

வில் ஸ்மித்
வில் ஸ்மித் செய்தது சரி என ஒரு தரப்பினரும், ஒரு பொதுவெளியில் ஸ்மித் நடந்து கொண்டது தவறு என்று மற்றொரு தரப்பினரும் கூறி வந்தனர். இந்த சம்பவம் சமூகவலைதளங்களிலும் பெரும் விவாதத்தை கிளப்பியது. இதையடுத்து வில் ஸ்மித் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

உணர்ச்சிவயப்பட்டேன்
அதில் வன்முறை என்பது எந்த வடிவில் இருந்தாலும் விஷமானது மற்றும் அழிவுகரமானது. ஆஸ்கர் அகாதெமி விருதுகளில் எனது செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது, மன்னிக்க முடியாதது. ஆனால் என் மனைவியின் உடல்நவிலை குறித்த நகைச்சுவையை என்னால் ஏற்க முடியவில்லை. மனம் தாங்க முடியாமல் உணர்ச்சிவயப்பட்டு அடித்துவிட்டேன்.

பகிரங்கமாக மன்னிப்பு
ராக், நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது எல்லையைத் தாண்டிவிட்டேன். நான் செய்த தவறுக்காக வெட்கப்படுகிறேன். அன்பும், கருணையும் நிறைந்த இந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை. ஒரு அழகான விருது வழங்கும் விழாவில் எனது நடத்தை தவறாக இருந்ததற்கு நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

வனிதா விஜயகுமார் இன்ஸ்டா
வில் ஸ்மித்தின் செயலை விட அவர் மன்னிப்பு கேட்டதை நிறைய பேர் பாராட்டினார். அந்த வகையில் வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வில் ஸ்மித்தின் பதிவை பகிர்ந்து, "தனது மனைவியை காக்கும் தைரியம். அது போல தனது தவறை ஒப்புக் கொள்ளும் பண்பு... நான் உங்களின் மிகப் பெரிய ரசிகையாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் வில் ஸ்மித்" என கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications