துல்கருடன் தூக்கலான வீடியோ வீடியோ வெளியிட்ட ரக்ஷன்...மீண்டும் சம்பவம் இருக்குமோ
சென்னை:வீஜே ரக்ஷன் லேட்டஸ்ட்டாக போட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோவைப் பார்த்து சந்தோசம் அடைந்தாலும், சமூக வலைதளங்களில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
வீஜே ரக்ஷன் போட்டுள்ள வீடியோவில் அவருடன் இன்னொரு நபர் இருப்பதுதான் சந்தேகத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.
அந்த நபர் வேறு யாரும் இல்லை கேரள திரையுலகம் மட்டுமின்றி பிற மொழிகளிலும் தன் இயல்பான நடிப்பால் முத்திரை பதித்து வரும் துல்கர் சல்மான் தான்.

நிகழ்ச்சியோடு ஒன்றிய பெர்பாமன்ஸ்
விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகளை நகைச்சுவையாக தொகுத்து வழங்குவதில் வீஜே ரக்ஷன் செம கில்லாடி. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்..!? இல்லை இவரே போட்டியாளரா!!? என்று பார்வையாளர்களே குழம்பும் அளவிற்கு நிகழ்ச்சியோடு ஒன்றி பெர்பாமன்ஸ் பண்ணுவது இவரது ஸ்டைல்.அதேவேளையில் இவருடன் ஜாக்லின் இணைந்து விட்டார் என்றால் அந்த நிகழ்ச்சியின் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது.

திரைப்படங்களில் அறிமுகம்
அந்த அளவிற்கு இருவரும் இணைந்து நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் இறுதிவரை சலிப்பு தட்டாமல் பார்க்கும் அளவிற்கு பட்டையை கிளப்பி விடுவார்கள்.இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் மூலம் சினிமாவில் இவர் காலடி எடுத்து வைத்தார்.

நிஜத்திலும் நண்பர்கள்
முதல் படமே துல்கர் சல்மானுடன் பெரிய புராஜக்ட் தான். படம் வெளிவந்து.. சூப்பர் ஸ்டாரே அந்தப் பட இயக்குனரை அழைத்து.. தனக்கு கதையை ரெடி பண்ணுங்க.., என்று சொல்லுமளவிற்கு பட்டிதொட்டியெல்லாம் அதிரி புதிரி ஹிட் அடித்தது. படம் முழுவதுமே தூல்கமர் சல்மானின் நண்பனாக, கிட்டத்தட்ட படத்தில் செகண்ட் ஹீரோ அளவிற்கு பெர்பாமன்ஸ் பண்ணுவதற்கு இயக்குனர் இவருக்கு வாய்ப்பு அளித்திருந்தார். இவரும் புதுமுகம் போன்று இல்லாமல் நல்ல முதிர்ச்சியான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
காபி கப்போடு ரீல்ஸ்
தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் துல்கர் சல்மானுடன் போட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோ 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் நினைவலைகளை சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இப்படம் வெற்றி பெற்றபோது இப்படத்தின் இரண்டாவது பாகம் வரும் என்று பேசப்பட்டது. இப்பொழுது இவர் போட்டுள்ள இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் ஒருவேளை கண்ணும் 'கண்ணும் கொள்ளையடித்தால் 2' சூட்டிங் ஸ்பாட்டா..!!?? என்று சந்தேகத்துடன் கேட்டு வருகின்றனர். ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் சினிமா பாக்ஸ்ஆபீஸ் க்கு இன்னொரு மாஸ் ஹிட் மூவி ரெடி..! என்று துல்கர் சல்மான் ரசிகர்களும், வீஜே ரக்ஷன் பாலோயர்களும் இணைந்து கியாரண்டி கொடுத்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications