பாக்கியலட்சுமி: மகளுக்காக கோபி செய்த செயல்! கதறி அழுத ஈஸ்வரி! துணையாக வந்த செல்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலின் இன்றைய எபிசோட், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அடுத்தடுத்த திருப்பங்களுக்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நிதீஷின் மரணம், கோபியின் கைது, மற்றும் இனியாவின் குற்ற உணர்ச்சி என இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக நகர்ந்தது.

இனியாவின் தவிப்பு
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், நிதீஷின் மயக்க நிலை கண்டு பதற்றமடைந்த இனியா, பாக்கியாவைப் பார்த்து, "போலீஸ் இங்க வர்றதுக்குள்ள நானே போய் சரண்டர் ஆகிறேன்!" என்று அழுது சொல்கிறார். இதைக் கேட்ட பாக்கியா, "யாரும் உன்னைத் தேடி எல்லாம் வரமாட்டாங்க, நீ கொஞ்சம் அமைதியா இரு," என்று ஆறுதல் கூறுகிறார்.
கோபியின் துணிச்சலான முடிவு
நிலைமையைப் புரிந்துகொண்ட கோபி, "போலீஸ் வந்தால் எப்படிச் சமாளிக்கணும் என்று எனக்குத் தெரியும். நீங்க எல்லாரும் ட்ரிப் கிளம்புங்க," என்று குடும்பத்தினரிடம் சொல்கிறார். மேலும், "நான் மட்டும் வீட்டில் நிக்கிறேன், நீங்க எல்லாரும் போங்க," என்று தைரியமாகப் பேசுகிறார். "என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கிறேன், என்னைப் பற்றி கவலைப்படாதீங்க," என்றும் கோபி உறுதியளிக்கிறார். இதைக் கேட்ட ஈஸ்வரி, "நானும் உன்னோட வீட்டில் நிக்கிறேன்," என்று கோபிக்குத் துணையாக இருப்பதாகச் சொல்கிறார்.

கோபி கைது
இதனைத் தொடர்ந்து, கோபியையும் ஈஸ்வரியையும் தவிர மற்ற எல்லாரும் வீட்டிலிருந்து கிளம்புகிறார்கள். சற்று நேரத்தில் போலீஸ் கோபி வீட்டிற்கு வந்து, "பாக்கியாவும் இனியாவும் எங்க?" என்று கேட்கிறார். அதோடு நிற்காமல், "இனியாவால்தான் நிதீஷ் இறந்தான். அதனால் இனியாவை அரெஸ்ட் பண்ணிக்கொண்டு போக வந்தோம்," என்று அதிர்ச்சித் தகவலைச் சொல்கிறார். இதைக் கேட்ட ஈஸ்வரி, எதுவும் தெரியாதது போல அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.
நிலைமையைப் புரிந்துகொண்ட கோபி, போலீஸைப் பார்த்து, "நீங்க தப்பா நினைச்சு வந்திருக்கீங்க," என்று சமாளிக்கப் பார்க்கிறார். ஆனால், போலீஸ் கோபியைக் கைது செய்து அழைத்துச் செல்கிறார்.
ஈஸ்வரியின் கண்ணீர்,செல்வியின் ஆறுதல்
கோபியைக் கைது செய்து அழைத்துச் செல்வதைப் பார்த்த ஈஸ்வரி கதறி அழத் தொடங்குகிறார். பின்னர், கோபியை போலீஸ் ஸ்டேஷனில் போட்டு அடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன.
மறுபுறம், இனியா பாக்கியாவைப் பார்த்து, "நான் தப்பு பண்ணிட்டேன்," என்று சொல்லி அழுகிறார். இந்தச் சம்பவம் அவருக்குள் பெரிய குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக, ஈஸ்வரி வீட்டில் செல்வி வந்து, ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்கிறார். பலமுறை வீட்டில் வேலை பார்க்கிறவள் என்று ஈஸ்வரி அவமானம் செய்தாலும் இன்று அவருக்கு உறுதுணையாக செல்வி தன் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
இன்றைய 'பாக்கியலட்சுமி' எபிசோடில் எதிர்பாராத திருப்பங்கள், சோகம், பதற்றம் என ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருந்தது. நிதீஷ் மரணம், கோபி கைது, இனியாவின் குற்ற உணர்ச்சி ஆகியவை அடுத்தடுத்த எபிசோட்களில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் சீரியல் நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications