வரிசையா இப்படியா வம்பு பண்ணுவாங்க, கோபத்தில் ராதிகா.. கடுப்பான கோபி.. கடைசியில் இப்படி மாறிட்டாரே!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத பல ட்விஸ்ட் நடந்திருக்கிறது.

கோபி ராதிகா திருமணம் நடக்குமா? நடக்காதா? என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த ஒரு முடிவு வியப்பை கொடுத்திருக்கிறது.

மணமேடையில் இருக்கும் கோபி இடம் தகராறு செய்யும் குடும்ப உறுப்பினர்களை பார்த்து ராதிகாவின் மனமாற்றம் இப்படியாகும் என்று எதிர்பார்க்கவில்லையாம் ரசிகர்கள்.

ஆதரவும் இருக்குது

ஆதரவும் இருக்குது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்தோடு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் இருந்து இரு தரப்பட்ட ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு தரப்பினர் கோபியின் கேரக்டர் சரியானது என்றும் தனது மனதிற்கு பிடிக்காத பெண்ணோடு எப்படி வாழ முடியும்? என்றும் கோபிக்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்தனர். ஆனால் இன்னொரு தரப்பினர் திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் பிறந்த பிறகு மனைவி வேண்டாம் என்று கோபி கூறுவது சரியா? என்று எல்லாம் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தனர்.

குழப்பத்தில் ராதிகா

குழப்பத்தில் ராதிகா

என்னதான் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும் தற்போது கோபியின் இரண்டாவது திருமணம் மணமேடை வரை வந்துவிட்டது. ஆரம்பத்தில் கோபி பாக்கியாவின் கணவர் என்று தெரிந்ததும் ராதிகா திருமணம் வேண்டாம் என்று மறுத்து வந்தார். ஆனால் ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணனின் வற்புறுத்தல் காரணமாகவும், ராதிகாவின் குழந்தையின் எதிர்காலத்திற்காகவும் கோபியை திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறார். இந்த நிலையில் நடக்கும் பிரச்சனைகளை பார்க்கும் போது மணவரையில் இருக்கும் ராதிகா அதிக அளவில் குழப்பத்தில் இருந்து வருகிறார்.

தொடரும் பிரச்சினைகள்

தொடரும் பிரச்சினைகள்

ராதிகாவின் நடவடிக்கையை பார்த்த ரசிகர்கள் இனி ராதிகா திருமணத்தை நிறுத்தி விடுவாரா? என்று எதிர்பார்த்து வந்தனர். ஆனால் தற்போது சீரியலில் நடக்கும் கலவரங்களால் ராதிகா மண மேடையை விட்டு இறங்கி ரூமிற்கு சென்று அழுது கொண்டிருக்கிறார். அப்போது கோபி ஆறுதல் சொல்ல வந்த நேரத்தில் தனது கழுத்தில் இருந்த மாலையை கழற்றி வீச எதற்காக எனக்கு இந்த ஒரு திருமணம்? இப்படி மண மேடையில் கேவலப்படுவதற்காகவா? என்று அழுது கொண்டிருக்கிறார். ஆனால் கோபி அவருக்கு சமாதானம் செய்து மீண்டும் மணமேடைக்கு கூட்டிக் கொண்டு வருகிறார்.

மாற போகுதா கதை

மாற போகுதா கதை

மீண்டும் மண மேடைக்கு வந்த ராதிகா மண்டபத்திற்குள் வந்த கோபியின் அப்பாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதுமட்டுமல்லாமல் கோபியின் அப்பா கோபி இடம் பேசும் வார்த்தைகளை கேட்டு கடும் கோபத்தில் ராதிகா இருந்து வருகிறார். இதனால் கோபியின் திருமணத்தை ராதிகா நிறுத்தி விடுவார் என்றும் அதற்கு பிறகு ராதிகா தன்னுடைய திருமணம் நிற்பதற்கு காரணம் அவருடைய குடும்பமும் தான் என்று பாக்யாவை பழி வாங்குவதற்காக வில்லி அவதாரம் எடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே ரசிகர்களின் கருத்துகள் தான் தற்போது சீரியலில் ஒளிபரப்பாகி வருவதால் இதுவும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+