இந்த ஒரு அடிப்படை அறிவு கூட இல்லையா..?? பிரபல சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் தற்போது நெட்டிசன்களால் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.
ராஜா ராணி சீரியல் லேட்டஸ்ட் ப்ரோமோ கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் இருந்து வருகிறது என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சீரியல் என்றால் அப்படி இப்படி இருக்கத்தான் செய்ய வேண்டும் ஆனால் இதன் மூலமாக ரசிகர்களுக்கு தப்பானதை புகுத்தி விடக்கூடாது என்று நெட்டிசன்கள் கருத்துக்களை சரமாரியாக இறக்கி வருகிறார்கள்.

ராஜா ராணி சீரியலை கலாய்க்கும் நெட்டிசன்கள்
பொதுவாக சீரியல்கள் என்றாலே ரசிகர்கள் எந்த அளவிற்கு அதை ரசித்துப் பார்க்கிறார்களோ அப்படித்தான் அதில் வெற்றி இருக்கும். சில நேரங்களில் சில சீரியல்கள் நெட்டிசன்களால் அதிகமாக கலாய்க்கப்பட்டாலும் அதிக அளவில் வெற்றி பெற்று விடுகிறது. தற்போதைய காலகட்டத்தில் அதிகமானோர் சமூக வலைதளத்தில் பயன்படுத்தி வருவதால் தங்களுடைய மனதில் தோன்றுவதை அப்படியே சமூக வலைத்தளத்தில் கருத்துக்களாக தெரிவித்து விடுகிறார்கள். அப்படித்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியலை பற்றியும் சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

மீண்டும் ஆலியாவின் அறிமுகம்
அதிகமானோர் சமூக வலைத்தளம் பயன்படுத்தாத காலகட்டத்தில் ராஜா ராணி என்னும் சீரியல் பலருடைய மனதையும் கவர்ந்திருந்தது. இந்த சீரியலில் ஆலியா மானசா மற்றும் அவருடைய கணவர் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இவர்களுடைய ஜோடி பொருத்தத்தை ரசிகர்கள் அதிகமாக ரசித்ததால் என்னவோ இவர்கள் இருவரும காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். முதல் சீசனின் வெற்றியில் இவருடைய திருமணம் முடிந்து விட்டது. தற்போது இரண்டாவது சீசனிலும் ஆலியா மானசாவே கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதிலாக சந்தியா கேரக்டரில் ரியா நடித்து வருகிறார்.

சந்தியாவின் ஆசை நிறைவேறுமா
முதல் சீசனில் வீட்டு வேலைக்கார பெண்ணாக நடித்த ஆலியா மானசா இரண்டாவது சீசனில் ஐபிஎஸ் ஆபீஸ்ராக வேண்டும் என்ற கனவோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு திருமணம் முடிந்து கணவர் சந்தியாவுக்காக ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில்,சந்தியாவின் மாமியார் குடும்பத்தினர் பலர் இவர் ஐபிஎஸ் அதிகாரி ஆக கூடாது என்று நினைத்து வருகிறார்கள். இவர்களுடைய நினைப்பை எல்லாம் முறியடித்து சந்தியா எப்படி ஐபிஎஸ் அதிகாரி ஆவார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்து வருகின்றனர். இது என் கணவன் என் தோழன் எனும் சீரியலின் டப்பிங் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ப்ரோமோக்கான ஹைலைட்
தற்போதைய எபிசோட்டில் சந்தியா யூ பி எஸ் சி எக்ஸாமில் செலக்ட் ஆகி இன்டர்வியூக்கு செல்ல இருக்கும்போது முதல்முறையாக அவருடைய மாமியார் அவருக்கு ஆசிர்வாதம் வழங்கி அனுப்பி வைக்கிறார். கணவரோடு பஸ்ஸில் சென்னைக்கு சென்று கொண்டிருக்கும்போது அந்த பஸ் எதிர்பாராத விதமாக பிரேக் டவுன் ஆகி விடுகிறது. காலையில் இன்டர்வியூக்கு செல்ல இருக்கும் நிலையில் சந்தியா இன்டர்வியூவில் கலந்து கொள்வாரா??இல்லையா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது இந்த ப்ரோமோக்கான ஹைலைட்டாக கடைசியாக, சரியான நேரத்திற்குள் சந்தியா ஐபிஎஸ் நேர்முகத் தேர்வுக்கு சென்று விடுவாளா?? என்று முடித்திருக்கிறார்கள். இதை பார்த்த நெட்டிசன்கள், யூ பி எஸ் சி எக்ஸாம் எழுதி பாஸ் ஆன பிறகு மார்க் அடிப்படையில் தான் போஸ்டிங் கிடைக்கும். அதற்கு முன்பே எப்படி ஐபிஎஸ் எக்ஸாம் என்று சொல்லலாம். அது யூ பி எஸ் சி எக்ஸாம். அதுமட்டுமல்லாமல் யுபிஎஸ்சி எக்ஸாமுக்கு டெல்லியில் மட்டும் தான் இன்டர்வியூ நடத்தப்படும் நிலையில் இவர்கள் சென்னைக்கு செல்கிறார்களா...?? இது கூட தெரியவில்லை என்று தங்களுக்கே புரிய பாணியில் கலாய்த்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: எலக்ஷனில் ஜெயித்த மீனா.. பிறகு நடந்த எதிர்பாராத சம்பவம்! மனம் மாறும் விஜயா.. சிந்தாமணியின் பிளான் -
ராத்திரி நேரத்து பூஜையில்.. விஜய் டிவி நிகழ்ச்சியில் டிஸ்கோ சாந்தி போட்ட டான்ஸ்! அசந்து போன ரம்பா! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்: முத்துவேல் பற்றி தெரிய வந்த பெரிய உண்மை.. அதிர்ச்சியில் கதிர்! உடையும் குடும்பம் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு!












Click it and Unblock the Notifications