எளிமையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...அனுபவங்களை உருக்கமாக கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திய விஜே அஞ்சனா
சென்னை: பிரபல விஜே அஞ்சனா தனக்கு கோரானா பாதித்துள்ளதை பற்றி இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
பரவிவரும் கோரானாவை யாரும் எளிமையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அதைப்பற்றி தெளிவாக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

அதிகரிக்கும் தொற்றுநோய்
தற்போதைய சூழ்நிலையில் பொது மக்களையும் பிரபலங்களையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் கொரானாவின் பிடியிலிருந்து பலரும் தப்பிக்க முடியாமல் தான் தவித்து வருகின்றனர். பல நாடுகளின் தலைவர்களும் இந்த இக்கட்டான சூழ்நிலையை கையாளுவதில் திணறிக்கொண்டிருக்கும் போது மக்களாகிய அனைவரும் பாதுகாப்புடனும், விழிப்புடன் செயல்பட்டால் மட்டும் தான் இதனை ஒழிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த இருந்தாலும், கட்டுக்கடங்காமல் நாளுக்குநாள் கோரானாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இது சாதாரண மனிதர்களை மட்டுமல்லாமல் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை.

அதிகரிக்கும் விழிப்புணர்வுகள்
பணம் இருக்கும் பணக்காரர்களுக்கும் அன்றாடம் வேலை செய்து சாப்பிடும் ஏழைகளுக்கும் நிலமை ஒன்றுதான் என்று இந்த கொரானா கோரத்
தாண்டவம் ஆடிவருகிறது. கோடிக்கணக்கில் பணம் இருந்தும் எத்தனையோ உயிர்களை பலரும் இழந்திருக்கின்றனர். இந்த நிலையில் இதற்கான விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தாங்கள் அனுபவித்த வேதனைகள் மற்றும் அதனை சரி செய்து கொண்ட செயல்களைப் பற்றியும் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பிரபலங்கள் பலரும் தெரியப்படுத்தி வருகின்றனர்.

விஜே அஞ்சனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
சினிமா துறையில் இருப்பவர்களையும் இது விட்டுவைக்கவில்லை. பலர் தொடர்ந்து இதில் பாதிக்கப்பட்டு தங்களுடைய நிலைமையை ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருப்பது போல விஜே அஞ்சனாவும் தற்போது செய்துள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் போஸ்ட் பார்த்ததும் ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தாலும், பலர் இவரக்கு ஆதரவு கூறி வருகின்றனர். சன்மியூசிக் மூலமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பலருக்கும் பரிச்சயமான ஒரு தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜே அஞ்சனா 90கிட்ஸ் களின் பேவரைட் விஜே ஆக இருந்து வருகிறார்.

ரசிகர்களுக்கு வேண்டுகோள்
தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் தனக்கு கோவிட் பாசிட்டிவ் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வாக இருந்தது, காய்ச்சல் வந்ததும் 2 ரேபிட் டெஸ்ட் செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் என்று வந்தது .ஆனால் RTB பாசிட்டிவ் என்று வந்துள்ளது. அறிகுறிகள் தோன்றுவதற்கு 3 முதல் 14 நாட்கள் வரை ஆகின்றது. அதனால் அறிகுறிகள் தோன்றினால் உடனே டெஸ்ட் எடுத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சமீபத்திய மாறுபாடு பரிசோதனை கூடங்களில் விரைவில் காட்டப்படுவதில்லை. இந்த நேரத்தில் வைரஸ் பரவல் அதிகமாக இருக்கின்றது. அதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications