இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. ஆசை நிறைவேறி விட்டது. விஜே தீபிகாவின் உருக்கமான வார்த்தைகள்
சென்னை: விஜே தீபிகா தற்போது தன்னுடைய மகிழ்ச்சியை கூறி வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
பல நாட்களாக ஆசைப்பட்டது தற்போது நிறைவேறிய மகிழ்ச்சியில் தீபிகா ஆனந்த கண்ணீரை சிந்தி இருக்கிறார்.
தனது சொந்த உழைப்பிலே அவர் கட்டிய வீடு பற்றி உருக்கமான தகவல்களை கூறியுள்ளார்.

என்ன ஒரு தத்துவம்
பிடிச்ச வேலை போயிட்டு என்றாலும், பிடிச்ச நபர் நம்மளை விட்டு சென்று விட்டாலும், பிடிச்ச வீடு, பிடிச்ச கார் எது நம்ம விட்டு சென்று விட்டாலும் அடுத்தடுத்து நம்மளுடைய வாழ்க்கையை நோக்கி நகர்ந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். அப்போது நம்முடைய சந்தோஷம் தானாக வந்துவிடும். கடந்து போனதை நினைத்து எப்போதும் வருந்தி கொண்டு இருக்க கூடாது. இருப்பதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பல தத்துவங்களை உதிர்த்திருக்கிறார். விஜே தீபிகா இவருக்கு இந்த சின்ன வயதிலேயே இவ்வளவு அறிவா.!!?? என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். தொகுப்பாளர் என்றால் சும்மாவா இப்படி எல்லாம் பேச வேண்டாமா??என்று ஒருத்தரப்பு ரசிகர்கள் பதிலளித்து வருகிறார்கள்.

கிராமத்து பொண்ணு
திருநெல்வேலி அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்த விஜே தீபிகா தொகுப்பாளராக வேண்டும் என்று தான் சென்னை வந்துள்ளாராம். வீட்டில் படிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு சென்னை வந்த இடத்தில் படித்துக் கொண்டு ஒவ்வொரு டிவி சேனலாக ஏறி இறங்கி இருக்கிறார். இவர் வாய்ப்புக்காக சென்ற போதெல்லாம் அனைத்து கதவுகளும் மூடிக்கொண்டதாம். ஆரம்பத்தில் எந்த மாதிரி உடை உடுத்த வேண்டும், எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை கூட எனக்கு தெரியாது அதனால் பலரும் என்னை பார்த்ததுமே நிராகரித்து விட்டார்கள் என்று வருத்தமாக கூறியிருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பதற்கு முன்பு விஜேவாக ஒரு சேனலில் இவர் அறிமுகம் ஆகி இருக்கிறார். அப்போது சில போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறாராம் . அதன் மூலமாகத்தான் இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு காலேஜ் படிக்கும் போது பரியேறும் பெருமாள் படத்தில் கயல் ஆனந்தியின் தோழியாக நடிக்க வாய்ப்பு இருந்ததாம். ஒரு சில சீன்களில் நடித்து இருந்ததாலோ என்னவோ இவருக்கு நடிப்பின் மீதும் பெரிய அளவில் ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக பலருடைய மனதையும் கவர்ந்து விட்டார். அதுவும் இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதும் இவருடைய ரசிகர்கள் பலர் பீல் பண்ணி வந்தார்கள்.

தீபிகா ஹாப்பி அண்ணாச்சி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பிறகு இதயத்தை திருடாதே எனும் கலர்ஸ் தமிழ் சேனல் சீரியலில் இவர் நடித்திருக்கிறார். பல நாள் ஆசை நிறைவேறிவிட்டதாக தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவர் முதல் முறையாக தன்னுடைய சொந்த உழைப்பில் சிறிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். அதுவும் அவர்கள் குடும்பமே நினைத்த மாதிரி அமைந்திருக்கிறது என்று இவர் மகிழ்ச்சியாக ரசிகர்களிடம் கூறியிருக்கிறார். இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன், பல நாள் ஆசை நிறைவேறிவிட்டது என்று உருக்கமாக கூறியுள்ளார். இவர் கட்டியிருப்பது சாதாரண கூலிங் சீட் போட்ட வீடு தான். ஆனாலும் தன்னுடைய உழைப்பின் மூலமாக இந்த வீட்டை கட்டிய மகிழ்ச்சியில் இதற்குப் பிறகு இதைவிட பெரியதாக மாடி வைத்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசை இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இவருடைய ஆசைக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications