விஜய் டிவியின் டாப் சீரியல் கதாநாயகியின் எளிமையான என்கேஜ்மென்ட்.. குவியுது வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் சீரியலில் நடிக்கும் விஜே தனுஷிக்கிற்கு எளிமையாக எங்கேஜ்மென்ட் நடைபெற்றிருக்கிறது. அவர் தன்னுடைய எங்கேஜ்மென்ட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சமீபத்தில் சில நாட்களாகவே பல நடிகைகள், நடிகர்கள் திடீர் திருமணத்தை அறிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் நேற்று முன்தினம் தான் சீரியல் நடிகர் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி இருவரும் திருமணம் செய்து இருந்தனர். வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தங்களுடைய காதலை தெரிவித்திருந்தனர்.

பொதுவாக ஒரே துறையில் வேலை பார்ப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்று புதிதல்ல. ஆனால் வேற வேற சீரியல்களில் நடித்த வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி இருவரும் காதலை அறிவித்ததும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. காரணம் பொன்னி சீரியலில் வைஷ்ணவி நடித்துவரும் நிலையில் அவருக்கு அண்ணனாக இரண்டு மாதங்களுக்கு முன்பு வெற்றி வசந்த் நடித்திருந்தார்.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் சந்தோசமாய் இருக்க காரணமே நான் தான்.. மிர்ச்சி சிவா சொன்ன ரகசியம்
பிறகு இருவரும் காதலை அறிவித்ததும் இது உண்மையா? அல்லது பொய்யா? என்று கூட கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் இந்த ஜோடி காதலை அறிவித்த அடுத்த இரண்டு மாதத்திற்குள் திருமணத்தையும் அறிவித்துவிட்டது. இவர்களை தொடர்ந்து அடுத்ததாக விஜய் டிவி பிரபலம் ஒருவர் எளிமையாக எங்கேஜ்மென்ட் முடிவு எடுத்து முடித்திருக்கிறார்.

அது வேறு யாரும் இல்லை, விஜய் டிவியில் டி ஆர் பி யில் முன்னணி இடத்தை பெற்று வரும் நீ நான் காதல் சீரியலில் கதாநாயகனின் அக்காவாக நடித்துவரும் விஜே தனுஷிக் தான். தனுஷிக் ஸ்ரீலங்காவை சார்ந்தவர்தான். அங்கு விஜேவாக பணியாற்றி வந்த தனுஷிக் நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்து அதற்காக முயற்சி செய்திருக்கிறார்.
அந்த நேரத்தில் தான் அவருக்கு அன்பே வா சீரியலில் ஜோதி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சின்ன வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இப்போது நீ நான் காதல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல கார்த்திகை தீபம் சீரியல் நடித்திருந்தார். இவருக்கு கடந்த 27 ஆம் தேதி மணி என்பவரோடு எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருக்கிறது. அது பற்றி மகிழ்ச்சியாக இவர் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கும் நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications