அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர்
சென்னை: இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'லீடர்' படம் ரிலீஸ்க்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில், ஷியாம், லால், ஆண்ட்ரியா ஜெரெமையா, சந்தோஷ் பிரதாப், பயல் ராஜ்புத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜிப்ரான் அமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 29ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, படப்பிடிப்பு அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். ஆனா, இந்த நிகழ்ச்சியில் நடந்த ஒரு விஷயம் தான் இப்போது இணையத்தில் பெரிய பேச்சு ஆகி இருக்கிறது.

அறந்தாங்கி நிஷா பேச்சு
மேடையில் பேச வந்த அறந்தாங்கி நிஷா, படத்தைப் பற்றிய விஷயங்களை விட தனது கணவருடன் இந்த படத்தில் நடித்த அனுபவங்களையும், குடும்ப விஷயங்களையும் நகைச்சுவையாக பேச ஆரம்பிச்சார். "இந்த படத்துக்குப் பிறகு நான் சரவணா ஸ்டோர்ஸ் பக்கம் போக முடியாது, ஏன்னா படத்தில் சரவணனை திட்டியிருக்கேன்"ன்னு சொல்லி சிரிப்பூட்டினார். அதோட, அடுத்த படத்தில் லெஜண்ட் சரவணனுடன் ஹீரோயினாக நடிக்கணும் என்பதையும் ஜாலியாக சொல்லி இருந்தார்.
அறந்தாங்கி நிஷாவை திட்டிய நடிகர்
அவரது பேச்சு சிலருக்கு நகைச்சுவையாக இருந்தாலும், சிலருக்கு "பட விழாவில் இது தேவையா?" என்ற எண்ணத்தையும் கொடுத்தது. இதற்குப் பிறகு மைக் பிடித்த விடிவி கணேஷ் தான் நேராக விஷயத்துக்கு வந்தார். "இங்கே எல்லாரும் படத்தைப் பற்றிதான் பேசினாங்க... ஆனா நிஷா மட்டும் வேற லெவலில் போயிட்டாங்க. படத்தை விட்டுட்டு சொந்த விஷயங்களை பேசுறாங்க... கொஞ்சமாவது விவஸ்தை வேண்டாமா?"ன்னு ஓபனாவே கேட்டார்.

அதோட அவர் அங்கேயே நின்று விடல. "அடுத்த படத்தில் ஹீரோயினா நடிக்கணுமாம்... இதை கேட்கவே சிரிப்பா இருக்கு. இங்க யாரும் இதை கேட்க வரல"ன்னு சற்று கடுமையாகவே விமர்சனம் செய்தார். இந்த பேச்சு நடந்த உடனே, மேடையில் இருந்தவர்களுக்கும், குறிப்பாக லெஜண்ட் சரவணனுக்கும் சற்று ஆச்சர்யமாக இருந்தது. அவருடைய முகபாவனை கூட மாறியதாக அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள்.
இப்போ இந்த சம்பவம் சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமாகவே மேடை பேச்சில் சுருக்கமில்லாமல் பேசுபவர் விடிவி கணேஷ். அதே ஸ்டைலில் இங்கவும் பேசிவிட்டார்.மொத்தத்தில், 'லீடர்' பட இசை வெளியீட்டு விழா, படம் பற்றி பேசப்படுவதற்கு முன்பே, இந்த சிறிய மேடை சர்ச்சை காரணமாகவே அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
-
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications