பாரிஸில் காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்றிய அஜய் கிருஷ்ணா... வேற லெவல் வளர்ச்சிதான்
சென்னை: சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா தன்னுடைய மனைவியோடு ஈபிள் டவர் முன்பு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.
கர்ப்பமாக இருக்கும் மனைவியோடு இரண்டாவது திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய அஜய் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள் அதிகரித்து வருகிறது.
காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்றிய அஜய் கிருஷ்ணா வாழ்க்கையில் இப்படி ஒரு வளர்ச்சியா என்று ரசிகர்கள் வியந்து போயிருக்கிறார்களாம்.

ஏழ்மையான குடும்பம்
விஜய் டிவி பிரபலமான அஜய் கிருஷ்ணா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரிச்சயம் ஆனவர்தான். இவர் அந்த சீசனில் அவ்வளவு பெரிய அளவில் பிரபலமாகவில்லை என்றாலும் இவர் ஜூனியர்களுக்காக சப்போர்ட் பண்ணி கொண்டிருந்த சீசனில் அதிக அளவில் பிரபலமாகி விட்டார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அஜய் கிருஷ்ணா மூன்று அக்காக்களுக்கு ஒரே தம்பியாக இருந்திருக்கிறார். இவருடைய அம்மாவும் இவர் சிறுவயதில் இருக்கும் போதே இறந்து விட்டாராம். அக்காவின் அரவணைப்பில் தான் இவர் வளர்ந்து வந்துள்ளார். அந்த நேரத்தில் திடீரென இவருடைய அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டதால் அவரும் வீட்டிலே முடங்கி விட்டார்களாம்.

வாழ்த்து முதல் திருமண வரை
குடும்பத்தின் மீது எப்போதுமே பாசமாகவும் அன்பாகவும் இருக்கும் அஜய் கிருஷ்ணா தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் குடும்பத்தை பற்றி கண்ணீர் மல்க பேசி இருக்கிறார். இந்த நிலையில் தான் இவருடைய வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை கொடுக்க வந்த ஜெஸ்ஸியை இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக பார்த்திருக்கிறாராம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தன்னுடைய பாடல் ஒன்றை பதிவிட அதற்கு வாழ்த்து கூறிய ஜெஸி ரிப்ளை செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நட்பாக பழகி பின்பு காதலித்து திருமணம் செய்து இருக்கின்றனர்.

விரைவில் அப்பாவாக போகும் அஜய்
காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு அஜய் கிருஷ்ணாவுடைய வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் நடைபெற்று இருக்கிறதாம். தற்போது பல பாடல்களை இவர் பாடி கொண்டிருக்கும்போது, இவர் ஒரு சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்தநாளில், தான் அப்பாவாக போகும் மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து இருந்தார். விரைவில் இவர்களுக்கு குழந்தை பிறக்க இருப்பதை குறித்து ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

மகிழ்ச்சியோடு கவனமும் வேண்டும்
இந்த நிலையில் தன்னுடைய காதல் மனைவியோடு பாரிஸ் ஈபில் டவர் முன்பு புகைப்படங்களை எடுத்து அதை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கின்றார். அதுமட்டுமில்லாமல் தங்களுடைய இரண்டாவது திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடி கொண்டிருப்பதாகவும் அதில் தெரிவித்து இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அஜய் கிருஷ்ணா மனைவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது என்று பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வந்தாலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வெளிநாடு பயணத்தில் கவனமாக இருக்க சொல்லி அறிவுரைகளையும் கூறி வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications