விக்ரமனை பற்றி எதுவும் தெரியாமல் பழகி விட்டேன்..வெளியே பார்த்து அதிர்ந்து விட்டேன்..ஏடிகே நெகிழ்ச்சி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஏடிகே விக்ரமன் மற்றும் அசீம் பற்றி பல தகவல்களை கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் பற்றி ஏடிகே வெளியிட்ட முதல் பதிவிற்க்கு முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் விக்ரமனுடைய பழைய வீடியோக்களை பார்த்து தான் அதிர்ந்து விட்டதாக ஏடிகே கூறி இருக்கிறார்.

வழக்கமான லைவ் நிகழ்ச்சி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு கடந்த வாரம் வெளியேறிய ஏடிகே முதல் முறையாக இன்று விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரின் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி இருக்கிறார். இது வழக்கமாக ஒவ்வொரு வாரமும் நடந்து வரும் சம்பிரதாயமாக இருக்கிறது. அந்தந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்கள் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்முறையாக இன்று ஏடிகே லைவில் வந்ததும் அவருடைய ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர். யார் டைட்டில் ஜெயிப்பார்கள் என்று தொடங்கி பிக் பாஸ் வீட்டிற்குள் பிடித்தது பிடிக்காதது என்று பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

தெரியாமல் நடந்த செயல்
அதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக விக்ரமன் பற்றி ஏ டி கே மனம் திறந்து பேசி இருக்கிறார். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது அனைவரிடமும் ஹக் செய்து பிரியா விடை கொடுத்தாலும் விக்கிரமனை மட்டும் கண்டு கொள்ளவே இல்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. அதைக் குறித்து ஏடிகே ஏற்கனவே விளக்கம் கொடுத்து இருந்தார். தான் அப்போது பல்வேறுபட்ட மனநிலையில் இருக்கும் போது என்னை அறியாமல் அந்த செயல் நடந்திருக்கும் ஆனால் என்னுடைய நண்பர் தான் விக்ரமன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

வெளியே தான் தெரிந்தது
அதைத்தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விக்ரமனை ஒரு சிங்கத்தோடு ஒப்பிட்டு தன்னை முயல் போல பாவித்து தான் இத்தனை நாளும் சிங்கத்தின் பக்கத்தில் இருந்தது தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேன் என்று பதிவை வெளியிட்டு இருந்தார். அதைப்பற்றி இன்று லைவில் கேள்வி கேட்க அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் விக்ரமனை பார்த்தது அவர் வெளியே எப்படிப்பட்டவர் என்ன ஒரு பின்புலத்தில் இருந்து வந்திருக்கிறார் என்று எனக்கு முழுமையாக தெரியாது. அவரும் என்னைப் போல ஒரு போட்டியாளர் என்று மட்டும் தான் நான் பேசி பழகி வந்தேன். அவரோடு நட்பாகவும் இருந்தேன். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த அடுத்த நாளே நான் விக்ரமனுடைய பழைய வீடியோக்களை பார்த்தேன்.

சிங்கம் என்று தெரியாதாம்
விக்ரமன் எதிரே இருப்பவர்களிடம் கேட்கும் அறிவுபூர்வமான கேள்வி மற்றும் எதிர்பார்க்க முடியாத பதிலை பார்த்து நானே மிரண்டு போய் விட்டேன். இத்தனை நாளும் நாம் ஒரு சிங்கம் என்று தெரியாமலே அதன் அருகில் முயல் போல வாழ்ந்து இருக்கிறேன். அதனால்தான் என்னுடைய நண்பனை பற்றி எனக்கு பெருமையாக இருக்கிறது என்று அந்த பதிவை கூறினேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் விக்ரமன் மற்றும் அசீம் இருவரில் யார் டைட்டில் ஜெயித்தாலும் எனக்கு சந்தோசம் தான். இருவருமே அதற்கு தகுதியானவர்கள் தான் இன்று ஏடிகே குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications