மகனை வைத்து வந்த மிரட்டல்கள்... மீடியாவை விட்டு சன் நியூஸ் மோனிகா விலக காரணங்கள் இது தானாம்!?
சென்னை: சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த விஜே மோனிகா பிறகு சின்னத்திரை நடிகையாக மாறி தற்போது தொலைக்காட்சியை விட்டு விலகி இருக்கிறார்.
பரபரப்பாக இருந்த இவர் திடீரென சின்னத்திரையை விட்டு விலகுவதற்கு அவருக்கு தொடர்ந்து தன்னுடைய குழந்தையை வைத்து வந்த மிரட்டல்கள் தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

செய்தி வாசிப்பாளர்
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் விஜே மோனிகா இவருடைய வானிலை செய்திகளை யாரும் மறக்க முடியாது. சன் டிவி செய்திகளில் மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவதுடன் இவர் தெய்வம் தந்த வீடு என்னும் சீரியலிலும் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பத்து ஆண்டுகளாக தொகுப்பாளராக பணி புரிந்த இவர் 2008 ஆண்டு இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. டிவி சேனல்களில் மட்டுமல்லாமல் சமூக வலை தளத்திலும் தனக்கு தவறென பட்ட விஷயங்களை வீடியோவாக தொடர்ந்து வெளியிட்டு வந்து கொண்டிருந்தார். இதனாலே இவருக்கு அதிகமாக மிரட்டல்கள் வந்து கொண்டு இருந்ததாம்.

மீண்டும் தொகுப்பாளர்
விஜே மோனிகா முதல் முதலாக காமெடி காலனி என்ற சீரியலில் அறிமுகமாகி பின்பு கடைசியாக செந்தூரப்பூவே என்னும் சீரியலிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வேந்தர் டிவியில் ஒளிபரப்பான சா பூத் திரி எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை இவர் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு தொகுப்பாளியாக பணிபுரிவது மகிழ்ச்சியை தருகிறது. அதுவும் ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மனதிற்கு மிகவும் நெகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது நான் தான் ராணி என்பது போல தன்னுடைய மனதில் தோன்றுவதாகவும் இவர் மகிழ்ச்சியாக கூறி இருக்கிறார்.

திரைப்படங்களிலும் அறிமுகம்
என்னதான் இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு பிடித்தது எல்லாமே தொகுப்பாளர் தானாம். அந்த வேலையை செய்வதில் எனக்கு எல்லை இல்லா ஆனந்தம் கிடைப்பதாக கூறியிருக்கிறார். சாமுவேல் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் சினிமா இயக்குனராகவும் முயற்சி செய்து வருகிறாராம். இவருக்கு ஜேடன் என்னும் ஆண் குழந்தையும் இருக்கிறது. சீரியல்களில் மட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடித்த ரௌத்திரம் எனும் திரைப்படத்தில் ஜீவாவுக்கு தங்கையாக மோனிகா நடித்திருக்கிறார்.

பிரமுகர்களின் மிரட்டல்கள்
இந்த நிலையில் சமீபத்தில் தனது குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்ட அதை ரசிகர்கள் பலர் பகிர்ந்து இது சன் டிவி செய்தி வாசிப்பாளர் தானே? எப்படி இருந்த இவர் இப்படி மாறிவிட்டாரே? என்று வியப்போடு கருத்து வெளியிட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இன்னும் பல ரசிகர்கள் இவரை தொடர்ந்து மிஸ் பண்ணுவதாக கருத்துக்கூறி வருகின்றனர். இந்த நிலையில் இவர் சமூக வலைத்தளத்தில் பல வீடியோக்களை வெளியிட்ட போது அதில் உள்ள நியாயங்களை பார்க்காமல் இவருக்கு எதிராக சிலர் மிரட்டத் தொடங்கி இருக்கிறார். குறிப்பாக இவருடைய மகன் படிக்கும் பள்ளியை தெரிந்து கொண்டு இவருடைய மகனை போட்டோ எடுத்து கூட இவரை மிரட்டி இருக்கிறார்களாம். அரசியல் பிரமுகர்களின் மிரட்டல்களுக்கு இவர் பயப்பட போவதில்லை என்றாலும் வீட்டில் இருப்பவர்களின் வார்த்தைகளுக்காக தற்போது இவர் அமைதியாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார். சில வருடங்களாக பிரேக் எடுத்து இவர் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர்மாம் என்ற நிகழ்ச்சியில் தனது குழந்தையோடு கலந்து கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications