
அடுத்த கண்ணம்மாவாக பிக்பாஸ் நடிகை தானா? அவரே வெளியிட்ட புகைப்படம்.. குவியும் கருத்துக்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் பாகம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில் அதன் இரண்டாவது பாகத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமான, தாமரை செல்வி கலந்து கொள்வதாக புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்.
முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரை ரசிகர்களின் மனதில் பெரும் ஆதரவை பிடித்த தாமரை செல்வி தற்போது திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சீரியலிலும் அறிமுகமாக போகிறார்.
கணவரால் கண் கலங்கி கதறி அழுத யாரடி நீ மோகினி சீரியல் நடிகை.. சீரியல் முடிவடைந்ததும் இந்த நிலையா?

எந்த ஆதரவும் கிடையாது
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமான தாமரை செல்வி இதற்கு முன்பு கோவில் திருவிழாக்களில் நடனமாடும் ஒரு நபராக தான் இருந்து வந்தார். அப்போதெல்லாம் அவர் அந்த அளவிற்கு பிரபலமாகாமல் இருந்தாலும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு வாரத்திற்குள் இவர் ரசிகர்களின் மனதில் தன்னுடைய வெகுளித்தனமான பேச்சால் ஆதரவை பெற்றுவிட்டார். இதற்கு முன்பு சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் பலர் ஏற்கனவே ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்களாக இருப்பார்கள். அல்லது சமுதாயத்தில் ஓரளவிற்கு வசதி படைத்தவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு ஆதரவு பலர் கொடுத்து வந்தாலும் இவர் எந்த ஒரு பின்பலமும் இல்லாமல் ரசிகர்களின் ஆதரவாலே கடைசி வரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வந்தார்.

கணவரோடும் நிகழ்ச்சியில் அறிமுகம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இருந்தாலும் அதை தொடர்ந்து வந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் இவர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டிருந்தாலும் அதை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக ஒரு திரைப்படத்தில் இப்போது இவர் பாடல் ஒன்றையும் பாடி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் இவருடைய கணவரோடு அவர் கலந்து கொண்டிருந்தார்.

வெளியான புகைப்படங்கள்
இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலின் இரண்டாவது பாகத்தில் இவர் நடிக்க இருக்கிறாராம். முதல் பாகம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில், இரண்டாவது பாகத்தில் இவர் என்ன மாதிரி கேரக்டரில் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இவர் இப்போது பாரதியாக நடிக்கும் அருண் மற்றும் கண்ணம்மாவாக நடிக்கும் வினிஷா இருவருடன் சேர்ந்து போட்டோஸ்கள் எடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் கனிஷ்காவுடன் பல போட்டோக்களை எடுத்து இருக்கிறார். கனிஷ்கா ஈரமான ரோஜாவே சீரியலில் இரண்டாவது பாகத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் கனிஷ்காவிற்கு அம்மாவாக பாரதி கண்ணம்மா சீரியலில் தாமரை நடிக்க இருப்பதாக கனிஷ்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஒருவேளை அப்படி இருக்குமோ
ஆனால் அதே நேரத்தில் கண்ணம்மாவின் அதே கெட்டப்பில் தாமரை செல்வியும் தலைவாரி பொட்டு வைத்து புடவை கட்டி இருப்பதை பார்க்கும்போது இவர்தான் அடுத்த சீசன் கண்ணம்மாவா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பாரதி கண்ணம்மா சீரியலில் தான் இணைந்திருப்பதை மட்டுமே குறிப்பிட்டிருக்கும் இவருக்கு அதிகமான லைக்குகள் குவிந்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் இவருடைய புகைப்படத்தை ரசிகர்கள் பலர பாரதிக்கு கண்ணம்மா என்ற பாடலின் மூலமாக எடிட் செய்து வைத்திருப்பதால் இவர்தான் இந்த சீசனின் கண்ணம்மாவாக இருக்க முடியும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.