பிக் பாஸ் 6: கூடவே இருந்த ஜனனி வெளியே சென்ற பிறகு அமுதவாணன் செய்த செயல்... அட இப்படியா பண்ணுவாங்க?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஒவ்வொரு வாரமும் ஒருவர் சென்றாலும் இந்த வாரம் வெளியேறிய ஜனனி சென்ற சில மணி நேரத்திற்குள் அவரோடு அதிகமாக நேரத்தை செலவிட்ட அமுதவாணன் செய்த செயல் பலருடைய கருத்துக்களையும் பெற்று வருகிறது.
கிட்டத்தட்ட 70 நாட்கள் முடிவடைந்த நிலையில் கடைசி வரை இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்த ஜனனிக்கு திடீர் வெளியேற்றம் அவரை மட்டும் அல்லாமல் அவருடைய ரசிகர்களையும் ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.
பரிதாப நிலையில் வெண்பா.. கண்ணம்மாவுக்கு கிடைக்கும் அதிர்ச்சி.. பாரதி செய்த எதிர்பாராத செயல்

யூகிக்க முடியாத வெளியேற்றம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் நேற்று எபிசோடு யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜனனி வெளியேற்றப்பட்டார். கடந்த ஒரு சில நாட்களாகவே ஆரம்பத்தில் மணிகண்டன் வெளியேறுவார் என்று கருத்துக்கள் வெளியாகி வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏடிகே தான் வெளியேற்றப்படுவதாக உறுதியான தகவல்கள் பரவி வந்த நிலையில் சம்பந்தமே இல்லாமல் ஜனனி வெளியேறியது இப்ப வரைக்கும் பலரால் யூகிக்க முடியாததாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஜனனி நிகழ்ச்சியை பற்றியும் நிகழ்ச்சியில் இருந்த சக போட்டியாளர்களை பற்றியும் பல்வேறு தகவல்களை பேசி இருக்கிறார்.

வெளியேறும் நிலையில் நடந்தது
அதே நேரத்தில் ஜனனி, திடீரென கமல் ஜனனியின் பெயரை சொன்னதும் எந்த ஒரு சலனமும் இல்லாமல் ஓகே என எழுந்து தன்னுடைய பொருள்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு, இதை எல்லாம் அனுப்பிவிட வேண்டும் என்று தனலட்சுமி இடம் கூறிக் கொண்டிருந்தார். பிறகு அனைவரும் இவரிடம் வெளியே உனக்கு நல்ல ஆப்பர்சூனிட்டி இருக்கிறது என்று கூறிக் கொண்டிருந்தாலும், சிரித்த முகமாகவே பேசிக் கொண்டிருந்தார். அடிக்கடி ஒரு சில வாரங்களாக ஷிவின் கூட சண்டை இட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட வெளியேறும் போது கடைசியாக ஷிவின் இடமும் பேசிவிட்டு தான் வெளியே வந்தார்.

அடக்க முடியாத அழுகை
எப்போதுமே ஜனனி அமுதவாணனுடன் தான் தனது கருத்தை பகிர்ந்து வருவார். ஆனால் வெளியே செல்லும்போது அமுதவாணனிடம் அதிகமாக பேசவில்லை. அமுதவணனும் எதுவுமே பேசாமல் அப்படியே சிரித்த வண்ணமாகவே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் ஜனனி வெளியே சென்ற பிறகு பாத்ரூமுக்குள் அழுது தீர்த்து இருக்கிறார். பின்பு கட்டிலில் வந்து இருக்கும்போது அவரையும் மீறி அழுது கொண்டிருந்தார். வழக்கம் போல ஏதோ பாட்டு பாடி கலாய்த்து கொண்டிருந்தாலும் அமுதவாணன் அதில் கலந்து கொள்ளவில்லை.

எதிர்பார்க்காத அழுகை
ஜனனி எங்கள் வீட்டில் ஒரு பெண் போல இருந்தால் என்னிடம் தான் அதிகமான எந்த விஷயத்தையும் பகிர்ந்து இருந்தாள்,அவளுடைய வெளியேற்றம் எனது கஷ்டமாக இருக்கிறது என்று அமுதவாணன் பீல் பண்ண இன்னும் நாலு வாரம் தானே இருக்கிறது வெளியே சென்று பார்த்துக் கொள்ளலாம் என சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூற, ஏற்றுக்கொள்ளாத அமுதாவாணன் பெட்ஷீட்டை மூடிக்கொண்டு அழுது கொண்டிருக்க, கதிர் மற்றும் விக்ரமன் மாறி மாறி அமுதவாணனுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கின்றனர். அமுதவாணன் இப்படி அழுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications