முத்தம் கேட்டு தொந்தரவு செய்த ராபர்ட் மாஸ்டர்.. ரட்சிதாவின் கணவர் வெளியிட்ட மிரட்டும் பதிவு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் முத்தம் கேட்ட விஷயத்தை தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலர் ரட்சிதாவிற்கு நீதி வேண்டும் என்று ஹேஷ்டேக் பகிர்ந்து செய்து வருகின்றனர்.
ரட்சிதாவின் கணவர் தினேஷ் ,ராபர்ட் மாஸ்டர் செய்த செயலை குறித்து வெளியிட்ட பதிவு ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதுவரைக்கும் பிரிந்து இருந்த ரட்சிதா மற்றும் அவருடைய கணவர் தற்போது வெளியிட்ட பதிவால் ரசிகர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

சின்னத்திரை மீனாட்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சின்னத்திரை மீனாட்சி என்று செல்லமாக அழைக்கப்படும் ரட்சிதா மகாலட்சுமி ஒரு போட்டியாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார் .விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் இப்ப வரைக்கும் மீனாட்சியாகவே வலம் வந்து கொண்டிருக்கும் ரட்சிதா தன்னுடைய நிஜமான கேரக்டரை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக பல வருடமாக காத்திருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

கணவர் தெரிவித்த வாழ்த்து
பல போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தன்னுடைய விளையாட்டை சிறப்பாக செய்து வருகிறார் .ரட்சிதா சின்னத்திரை நடிகராக அவருடன் நடித்த தினேஷ் கார்த்திகை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர் என்ற செய்திகள் பரவி வந்தது. ஆனால் ரட்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் அவருடைய கணவர் முதல் ஆளாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

ஆதரவான ஹேஸ்டேக்
ராபர்ட் மாஸ்டர் தன்னோடு பழகுவது சரியில்லை என்பதை புரிந்து கொண்ட ரட்சிதா நேற்றைய எபிசோடில் ராபர்ட் மாஸ்டரை கூப்பிட்டு நீங்கள் எனக்கு அண்ணன் என்று தெளிவுபடுத்தி இருந்தார் ஆனால் அப்போதும் ஏற்றுக்கொள்ளாத ராபர்ட் மாஸ்டர் அருகில் இருந்த மைனாவை கூப்பிட்டு, உனக்கு நான் அண்ணன் தானே எனக்கு முத்தம் கொடு என்று கேட்டதும் மைனா ராபர்ட் மாஸ்டரின் கையில் முத்தம் கொடுத்து விட்டு சென்று விட்டார். அதேபோல ரட்சிதாவிடம் கேட்டு தொந்தரவு செய்தார் ஆனால் ரட்சிதா நான் பாசக்கார அண்ணனாக பார்க்கிறேன் என்று அதனால் இப்படி செய்ய மாட்டேன் என்று தெளிவாக கூறியிருந்தார். இதை பார்த்து அவருடைய தீவிரமான ரசிகர்கள் ரட்சிதாவுக்கு ஆதரவாக"Stand for rachitha"என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ரட்சிதாவின் கணவர் வெளியிட்ட பதிவு
ரட்சிதாவை பற்றி வெளியே வரும் செய்திகளுக்கு பதில் சொல்லும் விதமாக ரட்சிதாவின் கணவரான தினேஷ், ரட்சிதாவுக்கு ஆதரவாக ஹேஷ்டேக் வெளி வருவதை குறித்து அந்த தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இருக்கிறார். அதில் ,இதை பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். மேலும் இதற்கு நானும் ஆதரவு அளிக்கிறேன். ஒரு பெண் நட்பாக எல்லோரிடமும் மகிழ்ச்சியாக இருப்பதால் அவள் எல்லாத்துக்கும் சரி என்று சொல்லிவிடுவாள் என்று அர்த்தம் இல்லை. எல்லா மனிதர்களும் அமைதியான சுதந்திரத்துடன் வாழ வசதியான சமுதாயத்தை உருவாக்க சில முட்கள் போன்ற மனிதர்கள் எறிய வேண்டும் என்ற பதிவை போஸ்ட் செய்து இருக்கிறார். இதை பார்க்கும் போதே தெரிகிறது ரட்சிதா மற்றும் தினேஷ் இடையே பிரச்சனை சிறிய அளவில் இருப்பதால் அது விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என்று. ஆனாலும் மகாலட்சுமி வெளியே வந்த பிறகு இதற்கு என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
-
வீட்டிற்குள் பார் செட்டப் வைத்திருக்கும் சீரியல் நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. காரணத்தை கேட்டு கடுப்பான ரசிகர்கள்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு!












Click it and Unblock the Notifications