வெறித்தனமான ரசிகர் போல! ரட்சிதா மகாலட்சுமிக்காக ரசிகர் செய்த செயல்.. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் நடிகை ரட்சிதா மகாலட்சுமிக்கு ரசிகர் ஒருவர் செய்த செயல் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக உச்சத்தில் வலம் வந்த ரட்சிதா இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகிறார்.
ரட்சிதாவின் புகைப்படத்தை ரசிகர் ஒருவர் தன்னுடைய பைக்கில் ஒட்டி அவருக்கு வித்தியாசமாக ஆதரவு தெரிவித்து வருகிறார்.

ரசிகர்களை கவர்ந்த மீனாட்சி
பார்த்தாலே பக்கத்து வீட்டு பெண் போல ஹோம்லியான லுக்கால் ரசிகர்களை கவர்ந்து சின்னத்திரையில், வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களை கவர்ந்திருக்கும் ரட்சிதா மகாலட்சுமி ரசிகர்கள் இப்போது செம ஆதரவு கொடுத்து வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு போட்டியாளராக ரட்சிதா அறிமுகம் ஆக போகிறார் என்று சொன்னதுமே அவருடைய ரசிகர்கள் அவருக்காக பேன்ஸ் பேஜ்களை திறக்க ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் தற்போது ரட்சிதா மகாலட்சுமி ரசிகர்களை கவரும் விதமாகவே பிக் பாஸ் வீட்டிற்கு விளையாடி வருகிறார் .

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக மீனாட்சி ஆக வலம் வந்து தனக்கென்று பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை ரட்சிதா ஏற்படுத்தி இருக்கிறார். இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் இவர் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி தன்னுடைய சுக துக்கங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இவர் பகிர்ந்து ரசிகர்களோடு பேசி வருகிறார்.

சப்போர்ட் கொடுக்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் ஆறாவது சீசனில் 20 போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். அதில் ரட்சிதாவும் ஒருவராக இருப்பதால் இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள் ஒருவர் புதுவிதமான முயற்சியை எடுத்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 4 போட்டியாளர்கள் மட்டுமே எலிமினேஷனில் சிக்கி இருக்கின்றனர். இந்த நிலையில் மகாலட்சுமியின் பெயர் அதில் வரவில்லை என்றாலும் அவருக்கு நாங்கள் இருக்கிறோம் என்று காட்டும் விதமாக ரசிகர்கள் செய்த செயல் இருந்து வருகிறது.

ரசிகர் செய்த செயல்
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ரட்சிதா மகாலட்சுமிக்கு வாழ்த்து கூறி அவருடைய கணவர் வெளியிட்ட பதிவு பலராலும் அதிசயமாக பார்க்கப்பட்டது. காரணம் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று அனைவரும் கூறி வந்தனர். இந்த நிலையில் ரட்சிதாவின் தீவிரமான ரசிகர் ஒருவர் தன்னுடைய புது ஸ்கூட்டியில் ரட்ச்சிதாவின் புகைப்படத்தை ஒட்டி சப்போர்ட் பார் ரட்சிதா மகாலட்சுமி என்று ஸ்டிக்கரை ஒட்டி இருக்கிறார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த ரசிகர் பதிவிடவே அவருக்கு ஆதரவு கூறி பல ரசிகர்கள் இந்த வீடியோவை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications