Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனனி என்னை பற்றி அந்த மாதிரி பேசிய வார்த்தைக்கு பதில் இதுதான்.. ரச்சிதாவின் எதிர்பார்க்காத செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விட்டு வெளியே வந்த ரச்சிதாவிடம் ஜனனி மன்னிப்பு கேட்டு இருக்கிறாராம்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது ரச்சிதாவை எருமை மாடுக்கு சேலை கட்டுன மாதிரி இருக்கிறது என்று உருவ கேலி செய்த ஜனனிக்கு ரச்சிதா எதிர்பார்க்காத பதிலை கூறியிருக்கிறார்.

ஜனனியின் பேச்சைக் கேட்ட ரச்சிதா அவர் இன்னும் ஒரு குழந்தையாக தான் இருக்கிறார். இதைவிட சமூக வலைத்தளத்தில் அதிகமான வார்த்தைகளை நான் கேட்டுவிட்டேன். அதனால் இதைப் பற்றி நான் எந்த வருத்தமும் படவில்லை என்று கூறியிருக்கிறார்.

ரசிகர்கள் கேட்ட சந்தேகம்

ரசிகர்கள் கேட்ட சந்தேகம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரச்சிதா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஏற்கனவே இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர் தான் இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் ஆக்டிவாக மாறி இருக்கிறார். அதுவும் அடிக்கடி லைவ் வந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வண்ணமாகவே இருக்கின்றார். இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் பல்வேறு கேள்விகளை கேட்டு தங்களுடைய சந்தேகங்கள் நிவர்த்தி செய்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் அதிகமானோர் கேட்கும் கேள்வியாக ஜனனி இடம் நீங்கள் நெருக்கமாகவும், பாசமாகவும் பழகி வந்தீர்கள். ஆனால் ஜனனி உங்களை பற்றி உங்களுக்கு பின்பு தெரியாமல் எருமை மாட்டுக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு என்று கலாய்த்தது தெரியுமா என்று கேட்டிருந்தார்களாம்.

உண்மையை கூறிய ஜனனி

உண்மையை கூறிய ஜனனி

அதற்கு ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு நான் வெளியே வரும்போது அந்த இடத்திற்கே என்னை தேடி ஜனனி வந்துவிட்டார். வந்து என்னிடம் அதிகமான வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தார். கடைசி ஆக இந்த விஷயத்தை கூறினால், ஆனால் அப்போது கூட எனக்கு சரியாக புரியவில்லை .நான் வெளியே யாரோ என்னை பார்த்து அப்படி சொன்னார்களோ? இல்லை வெளியே இப்படித்தான் போய்க்கிட்டு இருக்கிறதோ என்று கேட்டேன். அதற்கு ஜனனிக்கும் புரியாமல் ஆமாம் என்கிற மாதிரி சொன்னார். நான் அதை பற்றிய கவலை இல்லை என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். ஆனால் வீட்டுக்கு வந்து பிறகு தான் எனக்கே தெரிந்தது ஜனனி தான் அப்படி பேசி இருக்கிறார் என்று என ரச்சிதா கூறி இருக்கிறார்.

சின்ன பொண்ணு தானே

சின்ன பொண்ணு தானே

அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் நான் இருக்கும்போது ஜனனியை தான் அதிகமாக கொஞ்சிக் கொண்டே இருப்பேன். அவர் எல்லாரையும் விடவும் ரொம்பவே சின்ன பொண்ணு. இப்பதான் 21 வயசு ஆகுது. இப்போ எல்லாமே தனக்கு தான் தெரியும் தான் மட்டும் தான் பெருசு என்கிற ஒரு மனநிலை தான் இருக்கும். அது அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இருக்கிறது தான். இந்த வயதை தாண்டி தானே நாமே வந்திருக்கோம் அதனால் அவளே தெரியாமல் ஏதோ அப்படி பேசி இருக்கிறாள். அதோட தப்பு என்பதை அவள் புரிந்து இருக்கிறார். அதனால் அது எனக்கு பெரிய வருத்தத்தை தரவில்லை என்று கூறி இருக்கிறார்.

இது ஏற்கனவே நடந்திருக்கிறது

இது ஏற்கனவே நடந்திருக்கிறது

அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் இதைவிட மோசமான பல வார்த்தைகளை நான் பார்த்து கேட்டு விட்டேன். அதனால் எனக்கு ஜனனி பேசிய இந்த வார்த்தை எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஜனனி மீண்டும் என்னிடம் இதைத்தான் கூறிக் கொண்டிருந்தாள். ஆனால் எனக்குத்தான் அப்போ புரியவில்லை. அதைப்பற்றி நாங்கள் இருவரும் பேசி தெளிவு படுத்தி விட்டோம். இப்போதும் எனக்கு ஜனனிதான் க்யூட்டான பேபி, ரொம்பவே பிடிக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் சரி வீட்டிற்கு வெளியேவும் சரி ஜனனியோடு நான் அப்படித்தான் எப்பவும் பழகிக் கொண்டிருப்பேன் என்று ரச்சிதா கூறி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+