காதல் திருமணம், "நிறைவேறாத ஆசை”... எதிர்நீச்சல் சக்தியின் யாருக்கும் தெரியாத வாழ்க்கையின் மறுபக்கம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் கதாநாயகனாக சக்தி கேரக்டரில் நடிப்பவரின் பெயர் சபரி பிரசாந்த் தான்.
ஒரு பிசினஸ்மேன் ஆக இருந்த சபரி பின்பு நடிகராக மாறுவதற்கு பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் பல தோல்விகள் கிடைத்து வந்தாலும் சபரி பிரசாத் தற்போது எதிர்நீச்சல் சீரியலின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்திருக்கிறார்.

நிஜத்தில் அப்படி இல்லை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில சீரியல்கள் ரசிகர்களின் மத்தியில் டக்கென்று பிரபலமாகி விடுகிறது. அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் இப்போது இருந்து வருகிறது. அதில் கதாநாயகனாக சக்தி கேரக்டரில் நடிப்பவர் தான் சபரி பிரசாத். இவருடைய நடிப்பை பார்த்து பலர் பாராட்டிக் கொண்டிருந்தாலும் பல நேரங்களில் இவர் திட்டலையும் வாங்கிக் கொண்டிருக்கிறார். சீரியலில் ஒரு தெளிவாக முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இவருடைய நிஜ கேரக்டர் அப்படியே இல்லையாம். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையில் தான் கல்லூரியில் படித்திருக்கிறார். எஸ்ஆர்எம் கல்லூரியில் பி டெக் படிப்பை முடித்து எம்பிஏ படித்திருக்கிறாராம்.

நடிக்க ஆசை வருவதற்கான காரணம்
காலேஜ் படிக்கும் போதே படிப்பை விடவும் இவருக்கு டைரக்டராக ஆக வேண்டும் என்பதில் தான் அதிகமாக ஆசை இருந்ததாம். காலேஜில் இவர் பல ஷார்ட் பிலிம்கள் பண்ணியிருக்கிறாராம். அதுபோல அந்த ஷார்ட் பிலிம்களில் நடிக்கவும் செய்திருக்கிறாராம் சின்ன வயதில் இருந்து பல ஸ்டேஜ் டிராமாக்களில் நடித்திருக்கிறாராம். அதனாலேயே என்னவோ இவர் டைரக்டர் ஆவதற்கு இவருக்கு ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. இவர் இரண்டு ஆல்பம் பாடல்களில் கூட நடித்திருக்கிறார். இவர் மட்டுமல்லாமல் இவருடைய அப்பாவும் ஏடியாகவே மீடியாவில் வேலை செய்து இருக்கிறார். அதனால் தான் சபரி பிரசாத்துக்கு நடிப்பதற்கு ஆசை வந்ததோ என்னவோ. ஆனால் சபரி பிரசாத் அப்பா அவருடைய திருமணத்திற்கு முன்புதான் மீடியாவில் ஏடியாக இருந்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சபரி பிரசாத்தின் பெயரிலேயே பிசினஸ் தொடங்கி இருக்கிறாராம்.

முதல் சீரியல்
படிப்பு முடித்த பிறகு அப்பாவின் பிசினஸை கவனித்துக் கொண்டிருந்த சபரி பிரசாத் அந்த பிசினஸுக்கு எம்டியாகவும் இருக்கிறாராம். தனக்கு நடிப்பதற்கு ஆசை வந்த பிறகு காலேஜ் படிக்கும் போதே இவர் பல ஆடிஷன் அட்டென்ட் செய்திருக்கிறாராம். ஆனால் ஆரம்பத்தில் பல தோல்விகள் தான் இவருக்கு கிடைத்துக் கொண்டிருந்ததாம். ஆனாலும் வீட்டில் இவருக்கு அதிகமாக சப்போர்ட் கிடைத்திருக்கிறது. அந்த நேரத்தில் தான் இவருக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான தறி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் பணக்கார வீட்டு பையனாகத்தான் இவர் நடித்திருந்தார்.

எதிர்கால வாழ்க்கை
சொந்தமாக சபரி ஒரு புரொடக்ஷன் கம்பெனியை தொடங்கி இருக்கிறாராம். ஆனால் இப்போது அதை டிஜிட்டல் மயம் ஆக்கி விட்டாராம். சபரி நிஜ வாழ்க்கையில் காதலித்து தான் திருமணம் செய்து இருக்கிறார். பல வருடங்களாக காதலித்து கிருத்திகா என்ற பெண்ணை வீட்டில் சம்மதம் வாங்கி திருமணம் செய்திருக்கிறார். இவருடைய திருமணம் பெரிய அளவில் பலருக்கும் தெரியாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் தான் ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. குறிப்பாக இந்த வருடம் தலை தீபாவளியை இவர் இவருடைய மனைவியோடு கொண்டாடி ஒரு போட்டோவை வெளியிட்டு இருந்தார். அதற்கு பிறகு தான் பலருக்கும் எதிர்நீச்சல் சக்திக்கு திருமணம் முடிந்து விட்டதா என்று கேள்விகளை எழுப்பி வந்தனர். எதிர்காலத்தில் சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்பதற்காக முயற்சியில் இவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே கதை ரெடி பண்ணி கொண்டு தான் இருக்கிறாராம். தற்போது எதிர்நீச்சல் சீரியல் சக்தியாக பார்த்த இவரை கூடிய சீக்கிரத்தில் வெள்ளித்திரை கதாநாயகனாகவோ அல்லது டைரக்டராக பார்க்கலாம்.
-
Vadivelu: இதனால் தான் விவேக் இறப்புக்கு கூட போகல.. கண்கலங்க பேசிய நடிகர் வடிவேலு -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications