பிரபல சீரியல் நடிகை வெளியேறுவதற்கு காரணம் இதுதானா? அடுத்த நாளே இப்படி கூட நடக்குமா?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி 100 எபிசோடுகள் கூட தாண்டாத மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து சீரியலின் கதாநாயகி வெளியேறியிருந்தார். அது குறித்த பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கதாநாயகி மோக்ஷிதா வெளியேறிய அடுத்த நாளே அவருடைய இடத்தில் புது நடிகை நடித்து வருகிறார். இதைக் குறித்து ரசிகர்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

கதாநாயகியின் வெளியேற்றம்
சீரியல்களைப் பொறுத்தவரை இவருக்கு பதில் இவர் என்பது புதியதல்ல. வழக்கமாக நடப்பது தான். ஒரே நேரத்தில் சில நடிகர்கள் வெவ்வேறு சீரியல்களில் நடிப்பதால் அவர்களுக்கு கால்ஷீட் பிரச்சினையால் சிலர் விலகுவார்கள். இன்னும் ஒரு சிலர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வாய்ப்புக்காகவும் விலகுவார்கள். சிலர் நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறுவார்கள். ஆனால் சீரியல் தொடங்கி நூறு நாட்கள் கூட தாண்டாத நிலையில் சீரியலில் கதாநாயகியே வெளியேறி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை தான் கொடுத்திருந்தது.

தொடர்ந்த முரண்பாடுகள்
அது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சக்தி கேரக்டரில் நடித்த மோக்ஷிதா தான் .யாரும் எதிர்பார்க்காத விதமாக வெளியேறி இருக்கிறார். ஆனால் கதாநாயகி விருப்பப்பட்டு தான் இந்த சீரியலில் இருந்து வெளியேறுகிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது அவர் கன்னடத்தில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் சீரியலான செம்பருத்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது .தமிழில் முதல் முறையாக இந்த சீரியலில் இவர் நடிப்பதால் இவர் கால்ஷீட் கொடுக்கும் போது மாதத்தில் 15 நாட்கள் என்றுதான் கொடுத்திருந்தாராம். ஆனால் இப்போது ஒரு சில நாட்களாகவே இவருக்கு இவர் சென்னையில் இருக்கும் போது சூட்டிங் இல்லாமல் இருக்கிறதாம். ஆனால் இவர் பெங்களூர் சென்றதும், சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது அடுத்த நாளே சூட்டிங் இருப்பதாக அழைத்தார்களாம். அதனால் இவருடைய சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு இருந்தாராம்.

மாற்றப்பட்ட கதை
அதுபோல அவருடைய கால்ஷீட் பிரச்சினைகளுக்கு சீரியல் தயாரிப்பு சைடில் இருந்து இவருக்காக டேட் அட்ஜஸ்ட் பண்ணி கொடுத்துக் கொண்டிருந்தார்களாம். ஆனால் ஒரு சில நாட்கள் என்றால் இதை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் எப்போதுமே இப்படியே நடந்து கொண்டிருப்பதால்தான் இந்த சீரியலில் இருந்து விலக வேண்டியது இருந்து என்று அவர் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் .அதுபோல சீரியலில் ஆரம்பிக்கும் போது இவரிடம் கூறிய கதை வேறாக இருந்ததாம். ஆனால் தற்போது சீரியல் கதையே வேறாக எடுக்கப்பட்டு வருகிறதாம் .அதை டிஆர்பி பிரச்சனையினால் கூட இப்படி மாற்றம் நடந்திருக்கலாம் என இவர் நினைத்துக் கொண்டிருந்தாராம்.

அது எப்படி நடந்தது
இந்த நிலையில் கடந்த வாரம் இவர் விலகிய அடுத்த நாளே சக்தி கேரக்டரில் புது நடிகை நடிக்க வந்திருக்கிறார் .அதற்கு பிறகு தான் இவருக்கு சந்தேகம் வந்ததாக கூறி இருக்கிறார். ஒரு நடிகை நடித்து வந்த சீரியலில் இருந்து விலகி அடுத்த நாளே புது நடிகை நடிக்க வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்போ இது எல்லாமே பிளான் பண்ணி தான் நடந்ததா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இவரிடம் கமண்ட்டுகளில் கேட்டு வருகிறார்கள். இவருக்கும் கூட அதுதான் தோன்றுவதாக கூறியிருக்கிறார். நடிக்க வந்த முதல் சீரியலில் இவர் முழுமையாக நடிக்காமல் விலகி இருப்பது இவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை போலவே மோக்ஷிதாவுக்கும் ஏமாற்றமாகத்தான் இருக்கிறதாம்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications