நானும் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு இருக்கிறேன்.. விஜயகாந்த் பற்றி உருக்கமாக பேசிய "நாதஸ்வரம்” நடிகை
நடிகர் விஜயகாந்த் வீட்டிற்கு வருபவர்களுக்கு எப்போதும் சாப்பாடு விதவிதமாக காத்திருக்கும் என்றும் தானும் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு இருக்கிறேன் என சீரியல் நடிகை ஜெயந்தி கூறியிருக்கிறார்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்த நடிகை ஜெயந்தி தற்போது நடிகர் விஜயகாந்த் பற்றி பேசியிருக்கிறார்.
நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை ஆரம்பத்தில் இருந்ததற்கு இப்போது நல்ல முன்னேற்றம் அடைந்து இருக்கிறது என்று தகவல் கூறி இருக்கிறார்.
விஜயகாந்த் வீட்டில் எப்போது யார் சென்றாலும் அவருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும் குறிப்பாக சாப்பாடு விஷயத்தில் அனைவரும் பசியாறிக் கொண்டு போவார்கள் என்று கூறியிருக்கிறார்.

நாதஸ்வரம் சீரியல் மீனாட்சி
விஜய் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் அதிகமாக ரசிகர்களை கவர்ந்த சீரியலில் இடம்பிடித்து இருக்கும் நாதஸ்வரம் சீரியலை அந்த அளவிற்கு யாரும் எளிதாக மறந்துவிட முடியாது. அந்த சீரியலில் நடித்த அத்தனை கேரக்டர்களும் அவர்களின் பெயரை விடவும் சீரியலின் பெயர்களின் மூலமாகவே பிரபலம் அடைந்திருந்தனர். அந்த வகையில் அந்த சீரியலின் கோபியின் அம்மாவாகவும் மீனாட்சியம்மா கேரக்டரில் நடித்து வந்த ஜெயந்தி பேசிய வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் விஜயகாந்த் வீட்டு சாப்பாடு
அந்த வீடியோவில் நடிகை ஜெயந்தி நடிகர் விஜயகாந்த் பற்றி பேசி இருக்கிறார். விஜயகாந்த் வீட்டிற்கு நான் ஒருமுறை சென்றபோது அவருடைய வீட்டில் பொட்டலம் பொட்டலமாக பல பார்சல்கள் சாப்பாடுகள் இருந்தது. புளியோதரை, லெமன் சாதம், தயிர் சாதம் என பல சாதங்கள் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தது. அங்கே யார் சென்றாலும் முதலில் சாப்பிட்டு விட்டு தான் விஜயகாந்தை பார்க்க போவார்களாம் .அதிகமான பார்சல்கள் இருப்பதை பார்த்து நானே மெய்மறந்து போனேன். அங்கே தினமும் பல பேர் வந்து சாப்பிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே இத்தனை வகையான சாப்பாடுகள் செய்து வைத்திருக்கிறார்கள் என்று பிறகு தான் எனக்கே புரிந்தது என்று கூறி இருக்கிறார். நானும் அந்த சாப்பாடை சாப்பிட்டு பிறகு தான் விஜயகாந்தை என் கணவரோடு சேர்ந்து சந்தித்தேன் என்று கூறி இருக்கிறார்

உண்மை நிகழ்வு
அது மட்டுமில்லாமல் நடிகர் விஜயகாந்த இப்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார். அவர் அவருடைய நல்ல மனதிற்கு விரைவில் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுவார் என்று நெகிழ்ச்சியோடு பேசி இருக்கிறார். ஒருமுறை விஜயகாந்த் வீட்டிற்கு சென்றபோது அங்கே ஒரு நபர் தன்னுடைய பர்ஸ் தொலைந்து விட்டது என்று வந்தார். அவருக்கு சாப்பாடு கொடுத்து அவர் ஊருக்கு செல்வதற்கு தேவையான பணத்தையும் கொடுத்து அனுப்பினார்கள். இதை நான் பார்த்து வியந்து போனேன் என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோவை பலர் பகிர்ந்து சீரியல் நடிகை ஜெயந்திக்கு தங்களுடைய ஆதரவு கூறி வருகிறார்கள். நடிகர் விஜயகாந்த் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் அரசியல் பிரமுகராகவோ இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவருடைய உடல்நிலை சரியில்லாமல் போனது அவருடைய ரசிகர்கள் அதிகமானோர் வருத்தத்தில் இருந்து அவருக்காக வேண்டிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் தான் அவர் அவருடைய மனைவியோடு திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்து பலர் வாழ்த்தினாலும் பலர் எப்படி இருந்த மனுஷன் இப்போ இப்படி மாறிவிட்டாரே என்று ஏக்கத்தோடு கமாண்ட் அளித்து வருகிறார்கள்.

நம்பிக்கை வார்த்தை
இந்த நிலையில் நாதஸ்வரம் சீரியலில் நடிகை ஜெயந்தி தற்போது விஜயகாந்த் மீது தனக்கு இருக்கும் பாசம் மற்றும் மரியாதையை பற்றி நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். நடிகை ஜெயந்தி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் பல்வேறு சீரியல்களில் அம்மா கேரக்டரில் நடித்திருந்தாலும், இவருடைய கணவரின் வற்புறுத்தலினால் தான் இந்த சீரியலில் நடிக்க தொடங்கினாராம் .ஆனால் தற்போது தனக்கு கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் வரவேற்பை பார்த்து தொடர்ந்து நடித்து வருவதாக கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் கூறிய விரைவில் விஜயகாந்த் பழைய நிலையில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க அவருடைய துணிச்சலோடு வருவார் என்று நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார்.
-
விஜய் சேதுபதி இவ்வளவு ஓபனா பேசுவாருன்னு நினைக்கலையே! வெடவெடுத்து போன VJ பார்வதி! அடுத்த பஞ்சாயத்து -
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications