பிரபல நடிகர் மனைவி மரணம்? சக நடிகர் போஸ்டால் பரபரப்பு.. அட இவருக்கா இந்த நிலைமை!??
சென்னை: சின்னத்திரை நடிகர் ஆன ராஜ் கமல் சக நடிகரின் மனைவியை குறித்து வெளியிட்ட பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஜெமிலா சீரியலில் ஜெமிலாவின் அப்பாவாக நடித்து வரும் பாரத் கல்யாண் மனைவி திடீரென மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
சின்னத்திரை நடிகர் மனைவியின் திடீர் மரணத்திற்கு ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இரங்கல் செய்தி
சமூக வலைத்தளத்தில் சின்னத்திரை நடிகரின் பதிவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.காரணம் சின்னத்திரை நடிகரான பாரத் கல்யாண் மனைவி குறித்து நடிகர் ராஜ்கமல் தன்னுடைய instagram பக்கத்தில் வைத்த ஸ்டோரி தான் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதில் சின்னத்திரை நடிகர் ஆன ராஜ் கமல் rest in peace dear Priya ma என்று தெரிவித்து இருக்கின்றார். அதோடு stay strong Bharathkalyan anna என்று பதிவினை வெளியிட்டு இருக்கிறார். பாரத் கல்யாண் குடும்பத்தோடு ராஜ்கமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இவர் கொடுத்த கேப்ஷன் தான் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கலர்ஸ் தமிழ் ஜமீலாவின் அப்பா
நடிகர் பாரத் கல்யாண் கன்னட திரை உலகில் முக்கியமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் தமிழில் ஜென்டில்மேன், ஆதிலட்சுமி புராணம் போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து சின்னத்திரையில் இவர் பல சீரியல்களில் நடித்திருக்கிறார் விஜய் டிவி சன் டிவி போன்ற சேனல்களில் இவருடைய இவர் பல சீரியல்களில் குணச்சித்திர வேதங்களிலும் துணை கதாநாயகர்களாகவும் நடித்திருக்கிறார். தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஜமிலா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலிலும் இவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவருடைய மனைவி திடீரென மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி பலருக்கும் ஷாக்கிங் ஆக தான் இருந்து வருகிறது.

சூட்டிங் ஸ்பாட் திடீர் விசிட்
பாரத் கல்யாண் மனைவின் பெயர் பிரியதர்ஷினி இவர் ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் பாரத் கல்யாண் நடித்துக் கொண்டிருக்கும் சூட்டிங் ஸ்பாட்டிற்கு குடும்பத்தோருக்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். அந்த புகைப்படங்களை கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து என்னுடைய குடும்பத்தினர் சர்ப்ரைஸ் விசிட்டிங் அடித்து இருக்கின்றனர். சென்னையில் கொட்டும் மழை ட்ராபிக்கில் கூட என்னை பார்ப்பதற்காக வந்திருக்கின்றனர் என இவர் மகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார்.

மன தைரியம் வேண்டும்
பாரத் கல்யாணம் தன்னுடைய மனைவியான பிரியாதர்ஷினி உடன் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டிருக்கிறார். அடிக்கடி தன்னுடைய குடும்பத்தோடு புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வந்த பாரத் கல்யாணம் தற்பொழுது தன்னுடைய மனைவியின் மரணத்தை குறித்து எந்த ஒரு பதிவையும் வெளியிடவில்லை. அதுபோல பாரத் கல்யாணத்துக்கு ஒரு மகள் மற்றும் மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இது எப்படி நடந்தது என்று இவருடைய ரசிகர்கள் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் .அதுபோல பாரத் கல்யாணம் மற்றும் அவருடைய குழந்தைகள் இந்த துயரத்தில் இருந்து விரைவில் வெளியே வரவேண்டும் என்று என்று பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications