குழந்தையைப் பற்றி முதல்முறையாக பேசிய ரச்சிதா...கணவருடைய சிறப்பான கருத்து... இப்படி ஒரு அறிவுரையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் ரச்சிதா முதல் முறையாக தன்னுடைய வருங்கால குழந்தை குறித்து மனம் விட்டு பேசி இருக்கிறார்.

35 வயதில் தான் குழந்தையை தத்தெடுக்க போவதாக ரச்சிதா விருப்பத்தை தெரிவித்து இருக்கும் நிலையில் அவருடைய கணவர் தினேஷ் அவருக்காக ரசிகர்களிடம் ஓட்டு அளிக்க சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பிரிந்தாலும் கிடைக்கும் ஆதரவு

பிரிந்தாலும் கிடைக்கும் ஆதரவு

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே சின்னத்திரை நடிகையாக இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி அவருடைய காதல் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரித்து வாழ்ந்து வருகிறார்கள். முதல் சீரியலில் தன்னோடு நடித்த தினேஷ் கார்த்திக்கை ரச்சிதா காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் பிரிந்து இருந்தாலும் ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று தகவல்கள் வெளியானதும் அவருடைய கணவர் ரச்சிதாவிற்கு வாழ்த்து அனுப்பி இருக்கிறார். ஆனால் அந்த மெசேஜை ஓபன் செய்து பார்த்த ரச்சிதா அதற்கு பதில் கூட அளிக்கவில்லையாம். ஆனாலும் ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு அவருக்காக தொடர்ந்து தன்னுடைய ஆதரவை சமூக வலைதள பக்கங்களில் தினேஷ் கொடுத்து வருகிறார்.

கண்டிப்பான கண்டனங்கள்

கண்டிப்பான கண்டனங்கள்

ஆரம்பத்தில் ரச்சிதாவின் பின்னாடியே ராபர்ட் மாஸ்டர் சுற்றிக் கொண்டிருக்கும்போது கூட ரச்சிதாவை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் என்று ரச்சிதாவிற்கு ஆதரவாகவும், அதே நேரத்தில் ராபர்ட் மாஸ்டர் குறித்து பல கண்டனங்களையும் தெரிவித்து வந்தார். அதுபோல மைனா நந்தினி ரட்சிதாவினுடைய நெருங்கிய தோழியாக இருந்தாலும் ரட்சிதாவிற்கு எதிராக செய்யும் செயல்களை குறித்தும் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கோபத்தை காட்டி கருத்து கூறி வந்தார்.

குழந்தையைப் பற்றிய முடிவு

குழந்தையைப் பற்றிய முடிவு

இந்த நிலையில் நேற்று, தான் தன்னுடைய 35 வது வயதில் ஒரு குழந்தையை தத்து எடுக்க போவதாக ரச்சிதா கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு விக்ரமன் என்ன குழந்தை? ஆணா பெண்ணா என கேட்டதற்கு பெண் குழந்தை தான் எனக்கு ரொம்பவே பிடிக்கும் அதனால் பெண் குழந்தை தான் தத்தெடுக்க போகிறேன் என்று கூறியிருக்கிறார். அதுபோல தான் எதற்காக அந்த வயதை தேர்வு செய்தேன் என்றால் அதற்குள் நான் அதிகமாக கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தையை வளர்ப்பது என்பது எளிதான காரணம் அல்ல. எல்லாவற்றிற்கும் செட் ஆன பிறகு தான் குழந்தை விஷயத்தில் என்னால் முடிவெடுக்க முடியும் அதுபோல குழந்தையும் நன்றாக வளர்க்க முடியும் அதற்காகத்தான் 35 வயதை நான் தேர்வு செய்திருக்கிறேன் என்று கூறிக் கொண்டிருந்தார்.

கணவர் வெளியிட்ட ஆறுதலான வார்த்தை

கணவர் வெளியிட்ட ஆறுதலான வார்த்தை

ரச்சிதா பேசியதை கேட்ட ரசிகர்கள் பலரும் அப்போ இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகும் தன்னுடைய கணவரோடு ரச்சிதா சேர்ந்து வாழும் ஐடியாவில் இல்லையா என்று கேள்வியை எழுப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் ரச்சிதாவின் கணவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் எப்போதும் போல ரச்சிதாவுக்காக ஆதரவு திரட்டி கொண்டிருக்கிறார். இந்த வாரத்திலும் ரச்சிதா எலிமினேஷன் லிஸ்டில் இருக்கும் போது அவருக்கு ஆதரவாக, "யார் என்ன சொன்னால் என்ன? நீ செல்லும் பாதை சரியே, உன்னுடைய உண்மையான பாதை அவர்களுக்கு எதிராக இருப்பதால்தான் உன்னை குறை சொல்லி மட்டம் தட்டுகின்றார்கள். முன்னேறி செல்! நல்லதே நினைக்க நல்லதே நடக்கும்! "என்று தன்னுடைய வாக்கை ரச்சிதாவுக்கு செலுத்தி பதிவு வெளியிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+