"இங்க இருந்து வந்தாலே இப்படி தான் என்று அடையாளப்படுத்திட்டாங்க” விளக்கம் கொடுத்த அசல் கோலார்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அசல் கோலார் அந்த நிகழ்ச்சியில் அவரைப் பற்றி வந்த மீம்ஸுகளுக்கு விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தான் செய்த செயலுக்கு தன்னை மட்டும் தண்டிக்கலாம் அல்லது கருத்து கூறலாம் ஆனால் நான் வந்த இடத்தையும் என்னை சார்ந்தவர்களையும் பற்றி பேசுவது முறையல்ல என்று ரசிகர்களுக்கு அசல் கோலார் கருத்து கூறியிருக்கிறார்.

பரவி வந்த மீம்ஸ்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் வேற லெவலில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து விடுகின்றனர் .ஒரு சிலர் ரசிகர்களின் நல்ல பெயரை எடுத்து வந்தாலும் ஒரு சில ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் கருத்துக்களை வாங்குவதற்கு தவறவே இல்லை. இந்த ஆறாவது சீசனில் அசல் கோலார் ரசிகர்களின் மத்தியில் இரண்டாவது கேரக்டர் மூலமாக நெகட்டிவ்வாக மாட்டியிருக்கிறார் .இவர் சகப் பெண் போட்டியாளர்களிடம் நெருங்கி பழகி வந்ததை பார்த்த ரசிகர்கள் பலர் இவரைப் பற்றி மீம்ஸ்களில் அதிகமாக கலாய்த்து வந்தனர்.

கானா பாடகருக்கு கிடைத்த கண்டிப்பு
ஒரு கானா பாடகராக பிக் பாஸ் ஆறாவது சீசனில் அறிமுகமான அசல் கோலார் பல திரைப்படங்களிலும் பாடல்களை எழுதி இருக்கிறார். இவருடைய பாடல்கள் பல பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்திருக்கின்றது .இதன் மூலமாகத்தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிக் பாஸ் போட்டிகளில் அசல் தன்னுடைய திறமையை காட்டி வந்த நிலையில், சகப் பெண் போட்டியாளர்களிடம் இவர் தடவிக் கொண்டு உரசிக்கொண்டும் கடித்துக் கொண்டும் இருந்த பல வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது.

அதிர்ச்சி கொடுத்த மீம்ஸ்கள்
இதுவரைக்கும் எந்த சீசனிலும் இப்படி ஒரு போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொண்டதே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இவர் பெண் போட்டியாளர்களிடம் இருந்து வந்தார். அதனால் அவர் குறித்து சமூக வலைத்தளத்தில் நெகட்டிவ் கருத்துக்கள் பரவி வந்த நிலையில் இவர் இரண்டாவது வாரமே நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியே வரும் போது கூட இவர் என்ன காரணத்திற்காக நம்மை வெளியேற்றுகிறார்கள் என்று என்பது தெரியாமல் இருந்து வந்தார் .ஆனால் வெளியே வந்த பிறகு இவர் சமூக வலைத்தளத்தில் பார்த்து தெரிந்து கொண்டாராம். இவரைப் பற்றிய மீம்ஸ்களை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்ததாக கூறி இருக்கிறார்.

கெஞ்சிய அசல்
பிக் பாஸ் விட்டு வெளியே வந்த பிறகு தான்,பார்ப்பதற்கு அது தப்புதான் என்பது உணர்ந்திருந்தாராம். உள்ளே நான் தப்பாக எதுவும் செய்யவில்லை. சக நண்பர்களுடன் எப்படி இருப்போமோ அப்படித்தான் இருந்தேன். ஆனால் அதை குறித்து பலர் தெரிவிக்கும் கருத்துக்கள் தான் வேதனையாக இருக்கிறது. நான் தப்பு செய்தால் என்னை மட்டும் திட்ட வேண்டும் .ஆனால் என்னை சம்பந்தப்பட்டவர்களையும் நான் எந்த இடத்தில் இருந்து வந்ததால் அங்கிருந்து வந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று அடையாளம் படுத்துவதும் சரியல்ல. அதனால் இனி அப்படி செய்யாதீர்கள். நான் என்னை மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன். இனி யாரிடமும் அப்படி நடக்க மாட்டேன் என்று அசல் கோலார் ரசிகர்களிடம் தெளிவுபடுத்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications