தன் தோல்வியால் உடல்நிலை பாதிப்பாகி மருத்துவமனையில் ரசிகர்கள்.. விக்ரமன் கூறிய நெகிழ்ச்சி வார்த்தை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் முதல் முறையாக லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தனக்கு இந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்பதை தான் நினைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் தோற்று விட்டதால் ரசிகர்கள் பலர் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாகவும் அதற்கு தனக்கு வருத்தமாக இருப்பதாகவும் விக்ரமன் கூறியிருக்கிறார்.

முதல் லைவ் பேட்டி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல ஆரம்பத்திலிருந்து விக்ரமன் டைட்டில் ஜெயிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் கடைசியில் அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு அசீம் டைட்டில் ஜெயித்துவிட்டார். இதை ரசிகர்கள் பலரும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்ப வரைக்கும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று முதல்முறையாக விக்ரமன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு லைவில் வந்திருக்கிறார். அப்போது ரசிகர்கள் பலர் அவரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு அவர் பதிலளித்திருக்கிறார்.

பெண்களின் ஆதரவு
அந்த வகையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த அளவிற்கு தனக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை நினைத்து பார்க்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் ஜெயிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் பண்ணி என்னிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை எனக்கு பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. அனைவரும் என்னை அவர்கள் வீட்டுப் பிள்ளையாக பார்க்கிறார்கள். குறிப்பாக பெண்கள் தாய்மார்கள் எனக்கு தரும் ஆதரவு என்னால் என்ன சொல்வது என்றே தெரியாத வகையில் இருக்கிறது. அந்த அளவிற்கு பலரும் என் மீது பாசத்தை காட்டுகின்றனர் என்று கூறியிருக்கிறார்.

அன்பால் வரும் கண்ணீர்
அதுமட்டுமல்லாமல் விக்ரமன் தோற்றுவிட்டதை தெரிந்த ஒரு ரசிகருக்கு திடீரென வலிப்பு வந்துவிட்டதாம். அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறாராம். அது மட்டும் அல்லாமல் இன்னொரு ரசிகருக்கு அழுது மைக்ரேன் தலைவலி வந்துவிட்டதாம் அது மட்டும் இல்லாமல் இரண்டு நாட்களாக ரசிகர்கள் பலர் சாப்பிட கூட பிடிக்கவில்லை என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. மருத்துவமனையில் இருக்கும் ரசிகர்களுக்கு நான் வீடியோ காலில் பேசுகிறேன்.மனசுக்கு கஷ்டமாக இருந்தது. ரசிகர்களின் அன்பு எனக்கு கண்ணீர் வர வைக்கிறது என்று கூறி இருக்கிறார்.

பொங்கல் அறம் கோலம்
ஆனாலும் இப்போதும் சொல்கிறேன் எந்த இடத்திலும் அறம் தோற்றுப் போகாது. அறம் வென்று விட்டது. அந்த விளையாட்டில் மட்டும் தான் நான் தோற்று இருக்கிறேன். மக்களின் மனதை வென்று விட்டேன். எனக்கு இது போதும் ரசிகர்கள் எனக்கு இந்த அளவிற்கு ஆதரவு தந்திருப்பது பெரிய சந்தோஷம் எனக்கு எந்த ஒரு எக்ஸ்படேஷன் இல்லாத ஒரு ஆதரவு கிடைத்திருக்கிறது. தன்னிச்சையான அன்பு, அதுவும் பொங்கல் நேரத்தில் வீட்டில் கோலத்தில் அறம் வெல்லும் என்று பலர் எழுதியிருந்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் இன்னும் பார்க்கவில்லை. காரணம் இந்த நிகழ்ச்சியில் என்னோடு இருந்தவர்களோடு நட்பு தொடர வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் அதை பார்க்க விரும்பவில்லை என்று கூறி இருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications