எதிர்நீச்சல் சீரியலில் இதுதான் நடக்கிறது... வெளியே தெரியாத ரகசியங்கள் இருக்கு.. உளறிய கரிகாலன்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலனாக நடிக்கும் நடிகர் விமல் குமார் அந்த சீரியலை பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
முதல் முறையாக நடிகர் விமல் குமார் இந்த சீரியலில் தான் கரிகாலனாக நடிப்பை தொடங்கி இருக்கிறாராம்.
எதிர்நீச்சல் சீரியல் சமீபத்தில் நல்ல வரவேற்பு பெறுவதற்கான காரணம் அந்த சீரியலின் இயக்குனரும், கதையின் தரமும் அதற்கான உழைப்பும் தான் என்று கூறி இருக்கிறார்.

கதையே தெரியாது
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக சீரியல்கள் என்றால் பெண் ரசிகர்கள் தான் இருப்பார்கள் ஆனால் இந்த சீரியலுக்கு ஆண் ரசிகர்களும் இளைஞர்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் வெற்றிக்கு காரணம் என்ன என்பது பற்றி அந்த சீரியலில் கரிகாலன் கேரக்டரில் நடிக்கும் விமல் குமார் சமீபத்தில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். அதில் அவர் இந்த சீரியலுக்கு வருவதற்கு முன்பு நமக்குள் இருக்கும் திறமையையும் உள்ளே வந்ததும் பல மடங்காக மாற்றி விடுகிறார்கள். அது மட்டும் அல்லாமல் நாளை என்ன நடக்கப் போகிறது? கதை என்னவாக இருக்கும் என்பது இன்று இரவு கூட எங்களுக்கு தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.

அனைவருடைய அரவணைப்பு
சூட்டிங் ஸ்பாட்டில் சென்ற பிறகு இயக்குனர் என்ன மாதிரி நடிக்க வேண்டும் என்று சொல்கிறாரோ அதே மாதிரி நடித்தாலே போதும் ரசிகர்கள் கவரவதற்கு, எனக்கு இவ்வளவு ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று நான் நினைக்கவும் இல்லை அதற்கு காரணம் என்னுடைய சீரியல் அணியினரும் தான். இயக்குனரை போலவே என்னோடு நடிக்கும் சீரியல் நடிகர்களும் எனக்கு பல்வேறு நுணுக்கங்களை சொல்லித் தந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக குணசேகரன் கேரக்டரில் நடிக்கும் மாரிமுத்து அவர் வசனங்கள் பேசும் போது சொருகுன மாதிரி ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்று கூறுவார் என்று கூறி இருக்கிறார்.

நடிப்பின் மீது ஆசை
அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் இவரைத்தான் பிடிக்கும் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இங்கே நடிக்கும் அனைவரும் கூட்டு குடும்பமாகத்தான் நாங்கள் இருந்து வருகிறோம். ஒரு இடத்தில் நாம் டேக் வாங்கினாலும் இயக்குனர் நினைத்தது அடுத்த நேரத்தில் வர வைத்து விடுகிறார் என்று இயக்குனரை பற்றி பெருமையாக புகழ்ந்து பேசி இருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் ஒரு ரகடுபாயாக வளம் வந்து கொண்டிருக்கும் கரிகாலன் நிஜத்தில் ஒரு கல்லூரி பேராசிரியராக இருந்தவர் தானாம். அதற்கு பிறகு தான் இவர் நடிக்க வேண்டும் என்ற ஆசையினால் அதிலிருந்து வானொலி, அதைத்தொடர்ந்து தொகுப்பாளராகவும் மாறி இப்போது நடிகராகவும் மாறி இருக்கிறாராம்.

ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லையாம்
பல வாய்ப்புகளுக்காக போட்டோ கொடுத்து ஆடிசன் செல்வது போல தான் இந்த சீரியலுக்கும் ஆடிசனுக்கு ஆரம்பத்தில் இவர் சென்றிருந்தாராம். அப்போது இவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று இவர் எதிர்பார்க்கவே இல்லையாம். பின்பு இயக்குனர் திருச்செல்வம் ஆபீஸிலிருந்து இவருக்கு அழைப்பு வந்ததும் இவர் ஆரம்பத்தில் நம்பவே முடியவில்லையாம். அப்போது இவருக்கு என்ன கேரக்டர் என்று தெரியவே இல்லையாம். ஆனாலும் வாய்ப்பு கிடைத்தாலே போதும் என்று தான் நினைத்திருக்கிறார். ஆனால் கிடைத்த வாய்ப்பு இவ்வளவு பெருமையும் வரவேற்பையும் தரும் என்று இவர் எதிர்பார்க்கவில்லை என்று மகிழ்ச்சியாக கூறி இருக்கிறார்.
-
பிரதமர் நடித்த ஒரே படம் அமைதிப்படை தான்.. அதுவும் இந்த காட்சியை மறக்க முடியுமா? சத்யராஜ் சர்ச்சை பேச்சு -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications