அந்தப் பெண்ணை துரத்தி விடுங்க.. சூட்டிங் ஸ்பாட்டில் அர்ணவிடம் ரசிகர்கள் வேண்டுகோள்.. ஓப்பனா கேள்வி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த சீரியலின் ரசிகர்கள் கதாநாயகன் அர்ணவிடம் பல கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

ரசிகர்களோடு சகஜமாக பேசிக் கொண்டிருந்த அர்ணவிடம் சீரியலின் கதையில் பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக அந்தப் பெண்ணை துரத்தி விடுங்க என்று வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.

குடும்ப பிரச்சனை

குடும்ப பிரச்சனை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியல் ஆரம்பத்தில் அந்த அளவிற்கு வெளியே தெரியாமல் இருந்தாலும் அந்த சீரியலில் கதாநாயகன் குடும்ப பிரச்சனையின் மூலமாகவே சமூக வலைதளத்தில் அதிகமாக இந்த சீரியலின் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் கதாநாயகன் அர்ணவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியல் கதாநாயகி திவ்யா ஸ்ரீதர் உடன் திருமணம் செய்து பின்பு இவர்களுக்குள்ள கருத்து வேறுபாடு குடும்ப பிரச்சனை சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும் செல்லமா சீரியலின் மூலமாக பல பெண்களின் வரவேற்பை அர்ணவ் பெற்றிருந்தார்.

காதல் கதை

காதல் கதை

செல்லம்மா சீரியலில் செல்லமா தான் அர்ணவின் மாமன் மகளாக இருக்கிறார். ஆனால் அவர் குழந்தையாக இருக்கும்போதே கடத்தப்பட்டு வேறு ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டு ஒருவருக்கு திருமணம் முடிந்து அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அர்ணவ் அதாவது சித்து செல்லமாவை ஒருதலையாக காதலிக்கிறார். சித்து தன்னை காதலிக்கும் செய்தியை தெரிந்து கொண்ட செல்லம்மா அவரை விட்டு விலகி சென்று விட வேண்டும் என்று முடிவு எடுத்து ஒவ்வொரு இடமாக சென்று கொண்டிருக்கிறார். ஆனால் எப்படியும் செல்லமாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சித்து உறுதியாக இருக்க அதே நேரத்தில் வில்லி மேகாவுடன் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

திடீர் விலகல்

திடீர் விலகல்

இந்த நிலையில் இந்த சீரியலில் இதுவரைக்கும் மேகாவாக நடித்து வந்த திவ்யா கணேஷ் அதாவது பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி இந்த சீரியலை விட்டு திடீரென விலகி இருந்தார். அதற்கு காரணம் கூட இந்த சீரியலில் தன்னை சரியாக வேலை செய்ய விடாமல் சிலர் தொந்தரவு செய்கிறார்கள் என்று லைவில் கூறி இருந்தார். தான் இந்த சீரியலில் வில்லி கேரக்டருக்கு ரொம்பவே ஆசைப்பட்டு வந்ததாகவும் அந்த கேரக்டரை சரியாக நடிக்க விடாமல் பல பிரச்சனைகள் வருவதால் தான் அதிலிருந்து விலகி விட்டேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் தற்போது புது மேகாவும் சீரியலில் வந்து விட்டார். இப்போது மேகாவுக்கும், சித்துவுக்கும் திருமணம் நடக்குமா? இல்லையா? என்று விறுவிறுப்பான கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

தலைவலியாக இருக்காம்

தலைவலியாக இருக்காம்

இந்த நேரத்தில் இந்த சீரியலின் சூட்டிங்க் நடக்கும் இடத்தில் சில பெண் ரசிகைகள் அர்ணவை சந்திக்க வந்திருக்கின்றனர். அதில் அவர்கள் நீங்க எப்போ செல்லமாவை கல்யாணம் செய்து கொண்டு அந்த குழந்தையை உங்களோடு வைத்துக் கொள்ளப் போகிறீர்கள். அதேபோல அந்த மேகாவை துரத்தி விட்டுருங்க, அப்போதான் சீரியல் நல்லா இருக்கும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் அங்கிருந்த ஒரு ரசிகர் உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறதே அது எதற்காக? என்று யோசித்து யோசித்து எங்களுக்கு தலைவலி வந்து விடும் போல என்று நக்கல் செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் ஒரு சிலருடைய நடிப்பு நன்றாக இருப்பதாகவும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர் .இந்த வீடியோவை அர்ணவ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட இதற்கு அதிகமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+