கண்டென்ட் நாயகனை இழந்த பிக்பாஸ்...கதறி அழுத போட்டியாளர்கள்
சென்னை: ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறினாலும் பலர் மனவருத்தத்தில் இருந்து வருகிறார்களாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து இதையே கூறி வந்த ரசிகர்கள் பலர் நேற்று சாதித்து விட்ட மகிழ்ச்சியில் கொண்டாடி இருக்கின்றனர்.
என்னதான் இது ஒரு ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் தற்போது எதிர்பாராத செயல் நடந்திருப்பதால் அபிஷேக்கின் தீவிரமான ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர்.

ஏன் இந்த வெறுப்பு
பிக் பாஸின் ஐந்தாவது சீஸனில் ஒரு போட்டியாளராக அறிமுகமான அபிஷேக் ராஜா இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விளையாட்டை வேறு விதமாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று அதிகமான வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருந்தார். இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இவருக்கு அதிகமான நெகட்டிவ்வர்ஸ் உருவாகி விட்டனர். எல்லா இடங்களிலும் இவரே தன்னுடைய கருத்துக்களையும் திறமைகளையும் நிரூபித்துக் கொண்டிருந்ததால் ரசிகர்களுக்கு இவர் மீது இந்த அளவிற்கு வெறுப்பா?? என்று பலர் கேள்வி கேட்டு வருகின்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது
இந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் 18 போட்டியாளர்கள் முதல் முறையாக அறிமுகமாகி இருக்கின்றனர். எப்போதும் இல்லாத அளவிற்கு முதல் நேரத்தில் அறிமுக மாட்டார்கள். நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில நாட்களுக்குப் பிறகுதான் வையில்ட் கார்ட் என்ட்ரியாக ஒரு சிலர் என்ட்ரி கொடுப்பார்கள். ஆனால் இதுவரைக்கும் இந்த சீசனில் அப்படி யாரும் வரவில்லை என்றாலும் ஆரம்பத்தில் அதிகமான போட்டியாளர்கள் வந்துவிட்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக முதல் போட்டியாளராக நமிதா மாரிமுத்து வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு இரண்டு வாரங்கள் முடிவடைந்து இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷனில் வெளியேறி இருக்கின்றனர் .

வித்தியாசமான அணுகுமுறை
இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய வித்தியாசமான அணுகுமுறையால் விளையாடி வேறுவிதமான ரசிகர்களை என்டர்டைன்மென்ட் கொடுத்துக்கொண்டிருந்த அபிஷேக் வெளியேறிவிட்டது, அவருடைய ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருந்து வருகிறது. இந்த சீசனில் இருந்த சக போட்டியாளர்கள் யாருக்கும் இல்லாத வகையில் இவர் துறுதுறுவென எப்போதும் இருந்துகொண்டு அடுத்தவர்களிடம் வம்பிழுத்து நிகழ்ச்சிக்கு நன்றாகவே கண்டென்ட் கொடுத்துக்கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ப்ரமோவிலும் இவருடைய முகம் இடம் பிடித்து விட்டது. இது பலருக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.
Recommended Video

வெளியேறிய அபிஷேக்
முதல் வாரம் எலிமினேஷனில் இவர் வெளியேறி விடுவார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இவர் வராதது பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து இருந்தது. அதனால் மேலும் இவர் மீது ஆத்திரத்தில் இவருக்கு எதிராக பல கமெண்டுகள் சமூக வலைத்தளத்தில் அதிகரித்து வந்தன. இதன் காரணமாகவே பலரும் இவரை வெறுக்க தொடங்கிவிட்டார்கள். இந்த வாரத்தில் இவருக்கு வாக்குகள் குறைவாக இருந்தாலும், இவர் நிகழ்ச்சிக்கு கண்டென்ட் கொடுத்துக் கொண்டிருப்பதால் இவரை வெளியேற்ற மாட்டார்கள் என ரசிகர்கள் பலர் பீல் பண்ணி வந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் இவருடைய எலிமினேஷன் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.

போட்டியாளர்களின் கண்ணீர்
அபிஷேக்கின் எலிமினேஷன் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களுக்கும் பெருத்த அதிர்ச்சி தான். அதனால்தான் இவர் வெளியேறுகிறார் என்று தெரிந்ததும் பாவனி, சின்னப்பொண்ணு, தாமரை, அர்ச்சனா என அனைவரும் வரிசை கட்டிக் கொண்டு கண்ணீரில் மூழ்கிவிட்டனர். இவர்கள் அழுத அழுகையை பார்த்து ரசிகர்களுக்கும் ஃபீலிங்கை ஏற்படுத்திவிட்டன. இனி நிகழ்ச்சிக்கு யாரு கண்டென்ட் கொடுப்பார்கள் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். இனி நிகழ்ச்சி முன்பு போல சுவாரஸ்யமாக இருக்குமா என்பது பலருடைய கேள்வியாக இருந்துவருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications