பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகனுக்கு திடீர் கல்யாணம்.. நெருங்கிய நண்பர்களோடு எளிமையான கொண்டாட்டம்
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் அகிலன் கேரக்டரில் நடிக்கும் சுகிலேஷுக்கு எளிமையாக திருமணம் முடிந்திருக்கிறது.
திருமணத்தை பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாமல் சுகேஷ் திருமண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியின் தம்பியாகவும் இரண்டாவது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் சுகேஷ் திருமணத்திற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

விஜய் டிவி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து விட்டது. இந்த சீரியலில் முதல் பாகம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடையை இருக்கின்றது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடித்த நடிகர்களை ரசிகர்கள் அதிகமாக மிஸ் பண்ணுவார்கள். காரணம் இந்த சீரியல் பல வருடங்களாக ரசிகர்களோடு கலந்துவிட்டது. அதிகமாக ரசிகர்கள் இந்த சீரியலை கலாய்த்து வந்தாலும் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது.

பாரதி கண்ணம்மா அகிலன்
ஆரம்பம் முதலே இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் ரசிகர்கள் தனித்தனியாக இருக்கும் நிலையில் இந்த சீரியலில் அகிலன் கேரக்டரில் நடிக்கும் சுகேஷ் தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறார். ஏற்கனவே இந்த சீரியலில் இதற்கு முன்பு நடித்து வந்த நடிகர் இந்த சீரியலில் இருந்து விலகி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது, அவருக்கு பதிலாக புதியதாக அறிமுகமாக சுகிலேஷ் இந்த கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சுகேஷ் தற்போது திருமண பந்தத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறார்.

அகிலனுக்கு திருமண வாழ்த்துக்கள்
சுதேஷ் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பார்த்த ரசிகர்கள் பலருக்கும இன்ப அதிர்ச்சியாக இருந்து வந்துள்ளது. திருமணத்தைப் பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லையே என்று சிலர் செல்லமாக கோபித்து வருகின்றனர். இந்த நிலையில் இவருடைய திருமணத்திற்கு சென்ற பாரதி கண்ணம்மா சீரியல் அணியினர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில் கண்ணம்மாவாக நடிக்கும் வினிஷா எடுத்த புகைப்படங்கள், ஹேமா கேரக்டரில் நடிக்கும் குட்டி பாப்பாவின் புகைப்படங்கள் என பல்வேறு புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் அகிலன் ஆக நடிக்கும் சுதிலேசுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

நன்றி கூறிய சுகேஷ்
இவர்களுக்கு பலர் தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் உங்களுடைய வாழ்த்துக்கள் தொடர்ந்து வேண்டும் மக்களே, உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றிகள் என்று அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். புது வாழ்க்கையில் அடி எடுத்து வைத்திருக்கும் இவர் மாடலிங் பெண்ணான காவியா என்பவரை திருமணம் செய்து இருக்கிறாராம்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications