எழிலுக்கு யாரோடு திருமணம் வர்ஷினியா? அமிர்தாவா? கடைசியில் நடக்கும் ட்விஸ்ட் இது தான்! லீக் ஆன வீடியோ

பாக்கியலட்சுமி சீரியலில் எழிலுக்கு யாரோடு திருமணம் நடக்க இருக்கிறது என்ற வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழிலுக்கு திருமணம் நடக்கும் மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

குடும்பத்தில் இருக்கும் பிரச்சனையை காரணம் காட்டி ஈஸ்வரி வர்ஷினியை திருமணம் செய்து வைப்பதற்காக எழிலை சம்மதிக்க வைத்திருக்கிறார்.

ஆனால் கடைசி நேரத்தில் எழில் திருமணத்தில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வீட்டை விற்க போகும் கோபி

வீட்டை விற்க போகும் கோபி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து இருந்த திருப்பங்கள் தற்போது நடக்க தொடங்கி இருக்கிறது. பாக்கியலட்சுமி இருக்கும் வீடு என்னுடைய பெயரில் இருக்கிறது அதனால் பாக்கியலட்சுமியின் பெயரை சுவற்றில் வைக்க கூடாது என்று கோபி மிரட்டி இருக்கிறார். ஆனால் அதற்கு எழில் முடியாது என்று கூறியதை தொடர்ந்து அப்போ இந்த வீட்டை நான் விற்க போகிறேன் என்று கோபி முடிவெடுக்க, இந்த வீட்டை நானே வாங்கிக் கொள்கிறேன் என்று கோபி சவால் விட்டிருக்கிறார். கோபி அதற்கு ஒரு மாதம் தான் டைமும் கொடுத்திருக்கிறார்.

வர்ஷினியின் அப்பாவின் அக்ரீமெண்ட்

வர்ஷினியின் அப்பாவின் அக்ரீமெண்ட்

இந்த நிலையில் எழில் எடுக்கும் முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய கதைகளை விற்று விடலாம் என்று எழில் முடிவு செய்து இருந்த நேரத்தில் எழிலுடைய பழைய ப்ரொடியூசர் அதாவது வர்ஷினியின் அப்பா கதையை எந்த ப்ரொடியூசரும் வாங்காத வகையில் ஒவ்வொரு இடமும் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். இதனால் கதையை வர்ஷினியின் அப்பாவிடம் விற்பதற்காக எழில் கடிதம் கேட்டதற்கு வர்ஷினியை திருமணம் செய்தால் நானே பணம் தந்து படத்தையும் தொடங்க வைக்கிறேன் என்று கூறுகிறார்.

ஈஸ்வரியின் பிளான்

ஈஸ்வரியின் பிளான்

இந்த நிலையில் தான் அமிர்தாவை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று எழில் உறுதியாக இருக்கிறார். ஆனால் வர்ஷினியை தான் இந்த வீட்டில் மருமகள் ஆக்குவேன் அமிர்தாவை திருமணம் செய்ய விட மாட்டேன் என்று ஈஸ்வரி முடிவெடுத்துக் கொண்டு செழியனோடு சேர்ந்து ப்ளான் செய்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து எல்லா பிரச்சனைக்கும் காரணம் எழில்தான் என்று எழில் மீது மொத்த கோபத்தையும் காட்டிக் கொண்டிருக்கிறார். வீடு வாங்குவதற்கு பணத்தை எப்படியாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என பாக்கியா முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதுவும் கடைசியில் கோபியால் ஏமாற்றத்தில் முடிகிறது.

கடைசியில் நடப்பது இதுதானா

கடைசியில் நடப்பது இதுதானா

இந்த நிலையில் அனைவரும் தெருவில் தான் இருக்க வேண்டும் உனக்கு வேறு வழியே இல்லை என்று ஈஸ்வரி எழிலை பிளாக்மெயில் செய்து வர்ஷினியை திருமணம் செய்வதற்கு சம்மதிக்க வைக்கிறார். திருமண மேடையில் எழில் நிற்கும் வீடியோ தற்போது அந்த சீரியலில் செல்வியாக நடிக்கும் கம்பம் மீனா வெளியிட்டு இருக்கிறார். ஆனால் கடைசியில் அமிர்தா வந்ததும் திருமணம் நின்று எழில், அமிர்தாவின் கழுத்தில் தாலி கட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் மொத்த குடும்பமும் எழில் மீது கோபத்தை காட்ட இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+