Kalpana: யார் இந்த பாடகி கல்பனா ராகவேந்திரா? அழகு மலராட அபிநயங்கள் கூட பாடலை பாடியவரின் மகளா இவர்?
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் யார் தெரியுமா?
கல்பனா ராகவேந்திரா, ஹைதராபாத் நிஜாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இவர் வீட்டில் இருந்த நிலையில் இவரது வீட்டுக் கதவு இரு நாட்களாக திறக்கப்படாமல் இருப்பதை அவரது வீட்டு காவலாளி கவனித்துள்ளார்.

வீடும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருக்கும் நிலையில் இதுகுறித்து மற்ற குடியிருப்புவாசிகளிடம் அந்த காவலாளி தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் வீட்டிற்கு சென்ற குடியிருப்புவாசிகள் கதவை தட்டினர்.
அக்கம்பக்கத்தினர் சந்தேகம்
எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து சென்னையில் உள்ள அவரது கணவருக்கு தகவல் கொடுத்தனர். அவரும் கல்பனாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தகவலறிந்த நிஜாம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கதவை தட்டிய போலீஸ்
அப்போது முன்பக்க கதவை தட்டி பார்த்த நிலையில் யாரும் திறக்கவில்லை. கல்பனாவுக்கு போன் செய்து பார்த்தனர். அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பின்பக்கமாக உள்ள கதவை உடைத்துக் கொண்டு போலீஸார் உள்ளே போன போது அதிர்ச்சி காத்திருந்தது.
சரிந்து கிடந்த கல்பனா
அங்கு கட்டிலில் கல்பனா சுயநினைவின்றி இருந்துள்ளார். அவருக்கு அருகே தூக்க மாத்திரை இருந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
யார் இந்த கல்பனா
கல்பனா 1980 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை டி.எஸ். ராகவேந்திரா, தாய் சுலோச்சனா, தந்தை நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர். தாய் பாடகி. ராகவேந்திரா ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த படங்களில் வைதேகி காத்திருந்தாளில் நடிகை ரேவதிக்கு தந்தையாக நடித்த படம் மிகப் பெரிய பெயரை வாங்கி தந்தது.
அழகு மலராட
அதில் அழகு மலர் ஆட பாடலுக்கு ரேவதி நடனமாடும் போது டி.எஸ்.ராகவேந்திரா இசையமைப்பார். அதன் பிறகு சிந்து பைரவி, விக்ரம், சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு, சொல்ல துடிக்குது மனசு, வாய் கொழுப்பு, கற்பூர முல்லை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் புஷ்பாஞ்சலி, ஆனந்தபவன், கோலங்கள், அத்திப்பூக்கள் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு வயோதிகம் காரணமாக தனது 74 ஆவது வயதில் காலமானார். இவருடைய மகள் கல்பனா தனது 5 வயது முதலே பாடி வருகிறார். 2013 ஆம் ஆண்டு அவர் 1500 பாடல்களை பாடியுள்ளார்.
சூப்பர் சிங்கர்
அது போல் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அவர் 3 ஆயிரம் பாட்டுக் கச்சேரிகளை நடத்தியுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஸ்டார் சிங்கர் சீசன் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆவார். சூப்பர் சிங் ஜூனியர் நிகழ்ச்சியின் நடுவராக இருக்கிறார்.
6 வயதில் நடிகை
தனது 6ஆவது வயதில் புன்னகை மன்னன் படத்தில் கல்பனா நடித்துள்ளார். இவர் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா உள்ளிட்டோருடன் பணியாற்றியுள்ளார். போடா போடா புண்ணாக்கு, திருப்பாச்சி அருவாள் உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார். கல்பனா இசை குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தங்கையும் ஓபேரா பாடகிதான்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications